வன்னியில் தமிழ்மக்களின் அவலங்கள் - ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்?

வன்னியில் சிறிலங்கா அரசின் பிணந்தின்னிப் படைகள் நடாத்திய இனப்படுகொலைத் தாக்குதல்களினால் தமிழ் மக்கள் படும் அவலங்களையும் தாங்கொணா இன்னல்களையும் அம்பலப்படுத்தி நிற்கின்ற நிழற்படங்கள். இவைகள் யாவும் நேற்று முன்தினம் புதன்கிழமையும், நேற்று வியாழக்கிழமையும் பிடிக்கப்பட்டவை.

காயமடைந்து வேதனையில் துடிதுடிக்கும் பிஞ்சுப் பாலகர்களை
அரவணைத்து பால் கொடுக்க தாய் இல்லை. ஆதரிக்க உறவினர் இல்லை.
இந்த நிலையில் ஆதரவு இல்லங்களுக்கு எடுத்து வந்து
பராமரிக்கப்படும் பிஞ்சுகள் இவை.

மாட்டுத் தொழுவங்களை விட மோசமாக இருக்கும் மனிதர்களுக்கான
சிகிச்சை அளிக்கும் இடங்கள். இவற்றையும் விட்டால் வேறு வழியில்லை...

ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்
அவன் சொந்தங்களே அழமுடியாத நிலை. இறந்தவர்களை விட
இருப்பவர்களை காப்பதுதான் இப்போதுள்ள அவசரம்

இதற்கு மேலும் எங்கே இடம்பெயர்வதென்று தெரியவில்லை.
ஆனாலும் தொடர்கின்றது இடப்பெயர்வு

உயிரைப் பாதுகாக்க இப்படித்தான் ஆட்டு மந்தைகள்போல் காயமடைந்தவர்கள்
திருகோணமலை, புல்மோட்டைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்.

Comments