ஐக்கிய நாடுகள் சபைக்கு முடியாவிட்டால் யாரால் வன்னி மக்களை காப்பாற்ற முடியும்: தமிழீழ விடுதலைப்புலிகள்

பொதுமக்களின் இழப்புகளை தடுக்கும் ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகள் சபை, வன்னியில் உள்ள மக்களை காப்பாற்ற முடியாதுவிட்டால் யாரால் அவர்களை காப்பாற்ற முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கேள்வி எழுப்பினார்.

வன்னியில் உள்ள மக்களின் நிலைமையை தெரிந்து கொள்வற்காக இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி நம்பியாரின் வன்னிக்கான வருகையை இலங்கை அரசாங்கம் தடுக்கக்கூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் கோரியுள்ளனர்.

நம்பியார் வன்னிக்கு வந்தால் உண்மை நிலை தெரியவந்து விடும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் அவரின் வன்னி வருகையை தடுத்துள்ளதாக நடேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Comments