சிறிலங்கா இராணுவத்தினர் புதுக்குடியிருப்பை கைப்பற்றியதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் தமது அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர். இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்ககழகம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன் போது இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றினை அறிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் சுமார் 3லட்சம் தமிழ் பொது மக்களை இலக்கு வைத்து தமது யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் சிந்திய ஒவ்வொருத் துளி இரத்தத்திற்கும் இந்திய மத்திய அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என கட்சியின் பொதுச் செயலர் வை. கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இன அழிப்பினை மேற்கொள்வதற்கு இந்திய மத்திய அரசாங்கவே ஆயுத உதவி செய்துள்ளதாக வை. கோபாலசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments