இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற மக்களின் இன்றைய நிலை

இராணுவக் கட்டுப்பாடுப் பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ள மக்களை பராமரிக்க முடியாது இராணுவமும் இலங்கை அரசும் திண்டாடிவரும் நிலையில், பல அகதிகள் வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இன்னும் பலர் புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மரத்தின்கீழ் வாழ்கை நடத்தி வருகின்றனர். அங்கிருந்து வந்திருக்கும் புகைப்படங்களானது இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அகதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி சர்வதேச சமூகத்திடம் இருந்து பெருந்தொகையான பணத்தை நிவாரண நிதியாக பெற்றுக்கொள்ள இலங்கை அரசு திட்டம்தீட்டி வருவதாக அறியப்படுகிறது. இதன் காரணமாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்திகொடுக்கும் நிலை இருந்தும், எதனையும் செய்யாது இலங்கை அரசு இவர்களை மர நிழலின்கீழ் தங்கவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை உறவினர்கள் பார்வையிட காலை 6.00 மணி முதல் மாலை வரை காத்திருப்பதாகவும், அப்படி சந்திப்பதற்கு வாய்ப்புகிடைத்தாலும் சுமார் 10 நிமிடமே சந்திப்பை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு தரப்படுவதாகவும் உறவினர்கள் அதிர்வு நிருபரிடம் தெரிவித்தனர்.

இதனிடையே அரச ஒட்டுக்குழுவான டக்ளஸ் தேவானந்தா வவுனியா முகாம்களுக்கு சென்று அகதிகள் சிலரை வெளியே எடுத்துவிடுவதாகக் கூறியும், வேலை வாய்ப்பு தருவதாகக் கூறியும் மக்களை கவரமுயல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதியவர்களை தடுப்புமுகாம்களில் இருந்து வெளியில் விட 1 லட்சம், பெண்களை விடுவிக்க 2 லட்சம் என பேரம் பேசும் அரச ஒட்டுக் குழுக்கள், இவர்களின் அவல நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயல்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழர்களுக்கெதிரான யுத்தத்தில் முழு சிங்கள தேசமும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. ஆழும் கட்சி எதிர்கட்சி, தீவீரவாத கட்சி என அனைத்துக் கட்சிகளும் ஒன்றினைந்து நிற்கிறது. ஆனால் தமிழர் பக்கமமோ நிலமை வேறுவிதமாக இருக்கிறது...

Comments