இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த "பத்மஸ்ரீ" விருதை திருப்பி அனுப்புகிறார் பாரதிராஜா
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய "பத்மஸ்ரீ" விருதை திருப்பி அனுப்புவதாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாத மத்திய அரசு, தனக்கு வழங்கிய "பத்மஸ்ரீ "விருதை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதாக அறிவித்தார்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்காக தாம் மனம் நொந்து இருக்கும் இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் செய்யாத மத்திய அரசு வழங்கிய இந்த "பத்மஸ்ரீ" விருது, தனது மிகப்பெரிய உறுத்தலாக இருப்பதாகவும், அதனால் அந்த விருதை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டார்.

Comments