சிறிலங்காவின் கொத்தணிக் குண்டுத் தாக்குதலில் வன்னியில் மருத்துவர் பலி

சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பின்போது வலைஞர்மடத்தில் இயங்கிவந்த தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் படையினரின் கொத்தணிக்குண்டுத் தாக்குதலில் வலைஞர்மடத்தில் பணியாற்றிய மருத்துவர் சிவா மனோகரன் என்பவரே பலியாகியுள்ளார்.

இதேவேளை, மருத்துவமனை மீது இன்று மாலை நடத்தப்பட்ட கொத்தணிக் குண்டுத் தாக்குதலில் அங்கு பணியாற்றிய தாதிகள் மற்றும் ஊழியர்களும் சிகிச்சை பெற்றுவந்த காயம்பட்டவர்களும் இன்று பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

வைத்தியர் சிவா மனோகரன் அப்பகுதியிலிருந்து வெளியேற மறுத்து வந்தவர் என்பதும், இலங்கை இராணுவத்தினரின் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல் காரணமாகப் படுகாயமடைவோரைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments