சிறீலங்காவின் தற்போதைய நிலைமை ஒரு பயங்கரமான மனிதப் பேரவலம் - ஹிலாரி கிளிங்டன்

சிறீலங்காவின் தற்போதைய நிலைமை ஒரு பயங்கரமான மனிதப் பேரவலம் என அமெரிக்காவின் இராஜங்கச் செயலர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க காங்கிரசுக்குத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

சிறீலங்காவின் தற்போதைய நிலைமை ஒரு பயங்கரமான மனிதப் பேரவலம். நாங்கள் சிறீலங்கா அரசுக்கு அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம், யுத்தத்தை நிறுத்தி, யுத்தப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும்.

25 வருட இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், சொல்ல முடியாத துன்பங்களும் அனைத்துலக நாடுகளை ஏமாற்றமடையச் செய்துள்ளன என்பது சிறீலங்காவுக்கு அரசாங்கத்திற்கு தெரியும்.

சிறீலங்காவில் யுத்தத்தை உறங்கு நிலைக்கு கொண்டு வரவேண்டும். அல்லது முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அப்பகுதியில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் அரசியல் தீர்வும் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments