தமிழர்கள் பாதுகாப்பு மாணவர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், டைரக்டர் சீமானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இருந்து சென்னை வரை ரெயிலில் பிரசாரம் செய்யும் நூதன போராட்டத்தை தொடங்கினர்.
அவர்கள் போராட்டத்தை ஈழத்துக் கவிஞர் காசியானந்தன் தொடங்கி வைத்தார். இந்த மாணவர்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை உள்ள அனைத்து ரெயில் நிலைய பிளாட் பாரங்களிலும் இறங்கி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்புவார்கள்.
மேலும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்தும் இந்த நூதன போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இன்று இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்த நூதன போராட்டம் நிறைவடைகிறது.
ஓடும் ரெயிலில் நடைபெறும் இந்த நூதன போராட்டத்தை முன்னிட்டு ரெயிலில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அத்துடன் ரெயில் குறிப்பிட்ட நிலையங்களை அடையும் போது, அங்கும் அசம்பாவிதம் நடைபெறாதபடி பொலிஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நூதன போராட்டம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments