தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இன்று (செவ்வாய்) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை கருதி சில வேளைகளில் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்பதால் தமிழ் உறவுகள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஆரம்பித்துள்ள தன்னெழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிகளவிலான தமிழ் மக்கள் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments