அமெரிக்க கொள்கை வகுப்பார்களின் மீது செல்வாக்கைச் செலுத்தும் ஒரு ஊடகச் சக்தியாக மட்டுமன்றி, உலகளாவிய ரீதியில் பெரும் மதிப்பும் பெற்ற 'நியூயோர்க் ரைம்ஸ்' தமிழர் நிலையை 'சேர்பேனிக்கா படுகொலை'யுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளமை ஒரு காத்திரமான விடயம் என 'புதினம்' ஆசிரிய பீடம் கருதுகின்றது.
1995 ஜூலையில் இடம்பெற்ற 'சேர்பேனிக்கா படுகொலை' ஒரு 'இனப் படுகொலை' என அனைத்துலக சமூகத்தினால் - பல்வேறு மட்டங்களிலும் - ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக அரங்கில் தமிழர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் உரிமைப் போராட்டங்களின் பலாபலன்களில் ஒன்றாகவே 'நியூயோர்க் ரைம்ஸ்' பத்திரிகையில் இந்தக் கட்டுரை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது என நிச்சயமாகக் கருத முடியும்.
இந்த 'நியூயோர்க் ரைம்ஸ்' கட்டுரையின் உள்ளே 'சனல் - 4' தொலைக்காட்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வன்னி மக்கள் நிலவரம் பற்றிய ஒரு 'காணொளி' செய்தி விவரணமும் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்குச் சார்பான ஒரு புறச்சூழல் உலகில் நிச்சயமாக உருவாகி வருகின்றது என்பதை விளக்கி, அண்மையில், புதினத்தில் தி.வழுதி ஓர் ஆய்வை எழுதியிருந்தார் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
'நியூயோர்க் ரைம்ஸ்' கட்டுரைக்கான இணைப்பு: Is the World Ignoring Sri Lanka’s Srebrenica?
தி.வழுதியின் ஆய்வு: 4,795+... தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...
Comments