இனப்படுகொலைகளுக்கு எதிரான இந்தியர்கள் அமைப்பு - அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பத்திரிக்கையாளர் கருத்தரங்கு


இனப்படுகொலைகளுக்கு எதிரான இந்தியர்கள் அமைப்பு மற்றும் தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை அரசு இசைக் கல்லூரியில் உள்ள தாகூர் அரங்கில் கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பத்திரிக்கையாளர் கருத்தரங்கு நடைபெற்றது.

அதில் மத்திய, மாநில கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு, சிறிலங்கா அரசு, ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள இனப்படுகொலையைக் கண்டித்து "போர் நிறுத்தம்" உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என ஒரு மனதாக அனைத்துக் கட்சியினரும் கையொப்பமிட்டுள்ளனர்.

இதில் 11 கட்சிகள் கலந்து கொண்டனர்
தேசியத் தொலைக்காட்சி ஊடகங்கள்,
தேசியப் பத்திரிகைகள் பல கலந்து கொண்டனர்.

Comments