உலக நாடுகளை ஏமாற்றவே போர் நிறுத்தம்: விடுதலைப்புலிகள்

tamillogoதமிழகத்தையும், உலக நாடுகளையும் ஏமாற்றவே இலங்கை அரசு போர் நிறுத்தம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், இலங்கை அரசின் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்பு ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் இதுவரை 28 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இலங்கை ராணுவம் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழகத்தையும், உலக நாடுகளையும் ஏமாற்றவே இலங்கை அரசு போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உடையார் கட்டு பகுதியில் உள்ள தொண்டு நிறுவனம் மீதும், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனையின் மீதும் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது.

அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்துகின்ற நிரந்தரமான போர் நிறுத்தமும், அதனுடன் கூடிய அரசியல் பேச்சுவார்த்தையுமே பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என தமிழ் மக்களும், விடுதலைப்புலிகளும் நம்புவதாக கூறியுள்ளார்.

Comments