ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியா கொடுத்த விச வாயு குண்டுகளைப் பயன்படுத்தி தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிப்பதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் கோவை செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
07.04.2009 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை.க.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் கோவை ஆறுச்சாமி, பொள்ளாச்சி மனோகரன், திருப்பூர் அங்கக்குமார், முகில்ராசு, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கருமலையப்பன், கா.ச.நாகராசன், கோவை கதிரவன், மாநகரத் தலைவர் கோபால், சாஜித், தாராபுரம் குமார் ஆகிய பொறுப்பாளர்கள் உட்பட கோவை மாநகரம், கோவை தெற்கு, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.
Comments