பிரித்தானியா, நோர்வே, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் தொடர்ச்சியாக இளையோர்கள் உண்ணாநிலை போராட்டத்தினை நடத்தி வருகின்ற நிலையில் கனடா, டென்மார்க், சிட்னியிலும் தமிழர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அவுஸ்திரேலியா, சிட்னியில்...
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் மூன்று தமிழ் இளைஞர்கள் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கியிருக்கின்றனர்.
சிட்னியில் உள்ள பரமற்றா எனும் இடத்தில் இன்று பிற்பலக் 5:00 மணியளவில் சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை ஆகியோரே உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[அவுஸ்திரேலியா சிட்னியில்...]
[அவுஸ்திரேலியா சிட்னியில்...]
[அவுஸ்திரேலியா சிட்னியில்...]
- உடனடி போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும்
- வன்னியில் இருக்கும் தமிழ் உறவுகளுக்கு அத்தியாவசியமான உணவு தண்ணீர் மற்றும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாக்க வேண்டும்
- வன்னியில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவி உடனடியாக சேர்ப்பிக்கப்பட வேண்டும்
- தமிழ் மக்கள் சுதந்திரமாக தங்கள் இருப்பிடங்களை தேர்ந்தெடுக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும்
ஆகிய நான்கு கோரிக்கைகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நான்கு இளைஞர்களும் முன்வைத்திருக்கின்றனர்.
மேற்படி கோரிக்கைகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் நிறைவேற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என நான்கு இளைஞர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
கனடா, ஒட்டாவாவில்...
கனடிய நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு முற்றுகைப் போராட்டத்தின் நான்காவது நாளான நேற்று பல்லாயிரக்கணக்கான கனடிய தமிழர்கள் கலந்து கொண்டனர்.
கனடிய தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்றலில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் கவனயீர்ப்பு முற்றுகைப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.
[கனடா, ஒட்டாவாவில்...]
[கனடா, ஒட்டாவாவில்...]
[கனடா, ஒட்டாவாவில்...]
ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல் ஆகிய கனடியப் பெருநகரங்களில் இருந்து மக்கள் பெருமளவில் அதிகாலை முதல் திரண்டனர்.
கனடிய, தமிழீழக் கொடிகளைத் தாங்கி நின்ற அவர்கள், உடனடிப் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை கனடிய அரசு உடன் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து முழங்கங்களை எழுப்பினர்.
பெரிய வெள்ளி நாளான நேற்று பெருமளவில் மக்கள் கூடி நின்று நான்காவது தொடர் நாளாக கவனயீர்ப்பு முற்றுகையை மேற்கொண்டது கனடிய தலைநகர் மக்களையும், செய்தி ஊடகங்களையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
[கனடா, ஒட்டாவாவில்...]
[கனடா, ஒட்டாவாவில்...]
[கனடா, ஒட்டாவாவில்...]
இரண்டாவது தொடர் நாளாக கோரிக்கைகளை முன்னிறுத்தி உண்ணாநிலை மேற்கொண்டு வரும் ஐவரின் நிலைமையையும் மக்களின் உறுதியான போராட்ட முன்னெடுப்பையும் கனடிய ஊடகங்கள் நான்காவது நாளாக தொடர்ந்தும் ஒலி-ஒளிபரப்பியும் பிரசுரித்தும் வருகின்றன.
கனடிய தமிழ்மக்களின் உறுதியான தொடரும் போராட்டம் கனடிய அரசியல் வட்டாரங்களில் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைமைகள் ஈழத் தமிழர் விடயத்தில் அதீத கரிசனை வெளிப்படுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டென்மார்க்கில்...
டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்னேக்கனில் வெளிவிவகார அமைச்சின் சதுக்கத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்த தமிழர்கள் நேற்று மாலை 6:00 மணியளவில் உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
பிரபா சிவபாலசுந்தரம், சுகந்தினி தம்பிராசா, சுகுணன் மார்க்கண்டு, சாலினி பரமேஸ்வரன், திருமணமாகி ஒரு குழந்தையோடு கர்ப்பிணியான 30 வயதுடைய திருமதி சிறீவாணி தியாகராசா, நிரஞ்சன் கந்தையா இவர்களுடன் 62 வயதுடைய தவமணிதேவி பொண்ணண்ணன் ஆகிய 7 தமிழர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
[டென்மார்க்கில்...]
[டென்மார்க்கில்...]
[டென்மார்க்கில்...]
[டென்மார்க்கில்...]
[டென்மார்க்கில்...]
[டென்மார்க்கில்...]
Comments