தாக்குதல் நடத்தி பொதுமக்களை வெளியேற்றிய படையினரால் உணவுகளை கொடுக்க வழியில்லை

பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்திய இலங்கைப்படயினருக்கு அவர்களுக்கு உரிய உணவுகளை வழங்கமுடியில்லை என வவுனியா செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அரசாங்கம் பொதுமக்களிடம் இருந்து இடம்பெயர்ந்தோருக்கான உணவுப்பொருட்களை சேகரித்து வருகிறது

இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை முதல் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேறிய மக்கள் எப்போது வவுனியா தடுப்பு முகாம்களுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்ற தகவலை வவுனியா செயலகத்தரப்புகள் உறுதிப்படுத்தவில்லை

இந்தநிலையில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக கொழும்பில் தெரிவிக்கப்படுகின்ற போதும் யாழ்ப்பாணத்திற்கு ஐயாயிரத்து 147 பேர் மாத்திரமே வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்கள் மீன்பிடிப்படகுகளின் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.

Comments