இந்த கொன்று ஆட்டம் ஏற்கனவே CMR , TVI, CTR நிர்வாகத்தால் நாடாத்துவது முடிவு செய்ய்ப்பட்டுவிட்டது
அதை கருத்துக் கணிப்பு ஒன்றை நாடாத்தி அதில் தமது அருவடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றியீட்டி அதன் மூலம் மக்கள் தீர்ப்பு என்று சொல்லி நாடாத்தும் கண்துடைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது
இதற்கு வியாபார நிறுவனங்கள் முன்பதிவு செய்து விட்டன இதுவே இதற்கான சாட்சி
கருத்து கணிப்பு என்பது ஒரு கண்துடைப்பு மட்டுமல்ல பித்தலாட்டமும் கூட
பலரது இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு தமது அருவருடிகளுக்கு மட்டுமே இணைப்பு கொடுக்கப்படுகின்றது
ஒப்புக்கு ஒரு சிலருக்கு கொடுக்கப்படுகின்றது
நிர்வாகத்தினரால் சோடிக்கப்பட்ட காரணங்கள்
வன்னி அவலத்தை வேற்று இனத்திற்கு கொண்டு செல்லுவதற்கும்
இந்த முற்று முழுதான களியாட்டம்
எவ்வகையில் ஒரு அவலத்தை காட்டுவார்கள்
சாவு வீட்டில் குத்து பாட்டு ஒப்பாரிக்கு பாடப்போகின்றார்களாம் ??????
கனடியத்தமிழ் மக்கள் சோர்வடைந்து விட்டதாகவும் அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கும்
வன்னியில் பதுங்கு குழியே வாழ்வாகவும் பட்டினியும் படுகொலையும் நிகழ்வாகவும் வாழும் மக்களுக்காக எல்லோரும் வயது வேறு பாடின்றி இங்கு பாடுபட்டுக்கொண்டிருக்க
இந்த தமிழ்த்தேசிய ஊடகங்கள் என்று மார் தட்டியும் , குத்தகைக்கும் எடுத்து வைத்திருக்கும்
இந்த CMR , TVI, CTR கூட்டம் புத்துணர்ச்சிக்கு அலைந்து கொண்டிருக்கின்றது
மரணப் பசிக்கு மரவள்ளி கொடுக்காவிட்டாலும் எம் மக்களின் அவலத்தை உணர்ந்து கொண்டவர்களாக கூட
CMR , TVI, CTR கூட்டம் இல்லை
இங்கு சேர்க்கப்படும் பணம் வன்னிக்கு கொடுப்பது
இதுவே யுவன் சங்கர் இசை நிகழ்ச்சிக்கும் சொல்லப்பட்டது
இப்படியே போனால்
இன்னும் சிலர் வந்து
இன்னும் சொல்லப் போனால் இவர்கள் இனி விபச்சாரம் செய்து வன்னிக்கு பணம் அனுப்பலாம் என்று சொன்னாலும் சொல்லுவதற்கில்லை
இன்றைய சூழலில் எம் மக்கள் செய்யும் பங்களிப்புக்கள் அளப்பரியது
ஆனால் ஒரு சிலரின் களியாட்டத்திற்கு கொடுக்கப்படும் விலையாக இந்த கூட்டம் காட்ட முற்படுவது
தமிழ்த்தேசிய ஊடகங்கள் என்ற தங்களை பிரபலப்படுத்திய இந்த CMR , TVI, CTR கூட்டம் தாங்கள் எடுக்கின்ற எந்த தன்னிச்சையான தான் தோன்றித்தனமான நிகழ்வுகளை எம் மீது திணித்து நடாத்த முற்படுவது ஏன் ???
இதன் மூலம் எம்மை முட்டாள்களாக்குகின்றார்கள்
இதன் மூலம் புலம்பெயர் மக்கள் கண்மூடித்தனமாக சில ஊடகங்களின் வெளி வேசத்தை நம்பி ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்
இவர்களால் நடாத்தப்படுகின்ற ஒரு களியாட்டத்தையே
இவர்களால்
நிறுத்தவோ அல்லது
நிறுத்துவதற்கான உணர்வோ
அல்லது
பொது நலனோ இல்லாத CMR , TVI, CTR கூட்டம் தமிழ்த்தேசியத்தை உருவாக்கப்போகின்றார்கள் ???
கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வைகுண்டம் ஏறி சிவனை காட்டப்போகின்றார்களாம்
மக்களே சிந்தியுங்கள் !!!!
கொன்று ஆட்டம் போடும் இந்த கூட்டங்களின் கொன்றாட்டத்தை புறக்கணிப்போம்
வாருங்கள் மக்களே புறக்கணிப்போம் இந்த பிணம் தின்னும் CMR , TVI, CTR கூட்டங்களை
இனி யாரும் எமது மக்களின் பிணங்களில் பணம் கறக்க அனுமதியோம்
இதுவே மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்
நன்றி
எல்லாளன்
தொடரும் ,,,,,,,,,,
Comments
சரியான தலைமை கனடாவில் இல்லாதது பெரும் குறையே!மற்றது தடி எடுத்தவன் எல்லாம் தண்டகாரன் ஆகிறார்கள், தமிழக அரசியலை விட மகா கேவலமான விடயம்.