நேற்று இடம் பெற்ற டைம் 100 என்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை மாயா என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம் சந்தித்துள்ளார். ஆஸ்கார் விருது வென்ற சிலம் டோக் மில்லியனர் படத்தில் பாடல்களை பாடியுள்ளவரும்,
உலக அளவில் ராப் பாடல்களை பாடி மிக பிரபல்யமாக இருக்கும் இலங்கைத் தமிழரான இவர் உலகில் உள்ள 100 மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்சியை அமெரிக்க முதல் பெண்மணியும் பாரக் ஒபாமாவின் மனைவியுமான மிசேல் ஒபாமா தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மிசேல் ஒபாமாவைச் சந்தித்து இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மிசேல் ஒபாமா மிக ஆர்வமாக மாயாவின் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.தான் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு வந்த அகதி என்பதை அவர் பலமுறை மேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் புலிகளுக்கு சார்பாக பேப்பர் பிளேன்(காகித விமானம்) என்ற பாடலை வான் புலிகளுக்காக வெளியிட்டார் எனக்கூறி அமெரிக்க அரசு இவருக்கு விசா வழங்க மறுத்திருந்தது. தற்போது ஜோர்ஜ் புஷ் நிர்வாகம் அகன்று ஓபாமாவின் நிர்வாகம் இருப்பதால் அவர் அமெரிக்காவிலும் காலூன்றும் சாத்தியங்கள் காணப்படுகிறது .
அவருடைய காகித்தாள் விமானப் பாடலும், செவ்வியும் காணொளிகளாக இணைக்கப்பட்டுள்து.
Comments