150இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்


E-mail Print PDF
வன்னி முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் மேற்கொள்ளும் கடுமையான தாக்குலால் அங்கிருந்து வெளியேறி படையினரிடம் தஞ்சம் கோர முற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் கனரக ஆயுதங்கள் சகிதம் இனவழிப்புத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஐந்து சதுர கிலோமீற்றர் பரப்பளவில் முடக்கப்பட்டுள்ள மக்கள் செய்வதறியாது, உயிரச்சம் காரணமாக சிறீலங்கா படையினரிடம் தஞ்சம்கோர முற்பட்டபோது ஒரே நேரத்தில் 150இற்கும் மேற்பட்ட மக்கள் சிறீலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறீலங்கா படையினரது தாக்குதல்களில் மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள போதிலும், அது பற்றிய விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Comments