16 மணித்தியாலங்களில், படுகொலை இடங்களைப் பறந்து பார்வையிட்டு ஜனாதிபதியோடு விருந்துண்பார் பான்” - இன்னர் சிற்றி பிறஸ்
ஐ.நா அதிகாரிகள் குறிப்பிட்ட ‘கடற்கரையில் ஒரு இரத்தக்களறி’ என்பதைப் பார்வையிட, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி முன் மற்றும் ஊடகமும் ஒரு 16 மணித்தியாலப் பயணத்ததை சனிக்கிழமை மேற்கொள்கிறார்கள், இதை சிலர் வெற்றிச் சுற்றுலா என்றும் கூறுகிறார்கள்’ என இன்னர் சிற்றி பிறஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் இராணுவ உலங்கு வானூர்திகளில், ஐ.நாவின் ஜோன் கோம்ஸ் குறிப்பிட்ட ~உலகத்திலேயே மிகப் பெரிய உள்ளேயே இடம் பெயர்ந்தோர்களுக்கான முகாமான~, மேனிக் பார்முக்கு, பயணம் செய்வார்கள். இதில் வட்டாரம் 1 மற்றும் 4 ஆகியவைக்கே இவர்கள் பயணிப்பார்கள்.
தற்போது, ஐ.நா அல்லது அரசு சார்பற்ற அமைப்புகளோ இம்முகாம்களுக்குச் வாகனத்தில் செல்வதற்கு அனுமதியில்லை. மேஜர் ஜெனறல் சந்திரசிறியால் ஒரு சிறு பேச்சுக் கொடுக்கப்படும் என்றும், அத்தோடு ஒரு வைத்தியசாலைக்கும் அவர்கள் விஜயம் செய்வார்கள் என்று மேலும் இன்னர் சிற்றி பிறஸ் கூறியுள்ளது.
மேனிக் பார்மின் விஜயத்திற்குப்பின், ஐ.நாவுக்கோ செஞச்சிலுவைச் சங்கத்துக்கோ செல்வதற்கும், காயப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்படாத மற்றும் அநேகமான தாக்குதலும், இறப்புகளும் நடந்த பாதுகாப்பு வலயத்தை, பறந்துகொண்டு பார்வையிடுவார்கள்.
இதையே விஜய் நம்பியார் மே 22 அன்று மேல் இருந்து பார்வையிட்டு, அங்கே ஒரு மக்களும் இல்லை என்று முடிவெடுத்தார் என்று ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அங்கே புதைகுழிகளுக்குள் சடலங்கள் உள்ளதாகவும், சடலங்கள் புதைக்கப்பட்டு சாட்சிகள் அழிக்கப்பட்டதாகவும் பேச்சுக்கள் உள்ளன என்று மேலும் இன்னர் சிற்றி பிறஸ் தெரிவித்துள்ளது.
Comments