2000 பொதுமக்கள் வைத்திய சாலையில் மருந்துகள் இன்றி இறக்கப்போகின்றனர்--காணொளி

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள தற்காலிக வைத்தியசாலை அருகில் கடும் சமர் இடம் பெறுவதாக கூறியுள்ள வைத்தியர் வரதராஜன் அவர்கள் தாம் அங்கிருந்து சிறு தூரத்தில் இருப்பதாகவும் வைத்தியசாலையில் சுமார் 2000 பேர் காயங்களுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பல நோயாளிகள் மருந்தின்றி இறப்பதாக கூறியுள்ள அவர் கடும் எறிகணைத் தாக்குதல் நிகழ்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்கிர சமர் இடம் பெற்றுவரும் நிலையில் தாமும் காயப்படலாம் என குறிப்பிட்டுள்ள மருத்துவர், இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குவதாக கூறியுள்ளார்.

பிந்திக் கிடைத்த ஊர்ஜிதமற்ற தகவலின்படி மருத்துவர் வரதராஜனை இலங்கை ராணுவம் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது, இருப்பினும் இச் செய்தியை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை. அவர் வழங்கிய செவ்வி ஒலி வடிவில்

Comments