28 வருடங்கள் மே மாதம் 31ம் திகதி யாழ் நூலகம் சிங்கள இனவெறியர்களால் தீக்கிரையாக்கபட்டது

28 வருடங்கள் கடந்தோடி விட்டது. 1981 ஆண்டு மே மாதம் 31 திகதி மாலை, சிங்கள இனவெறியர்களால் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. ஆசியக் கண்டத்திலேயே பழைமையும், பல பழமை வாய்ந்த ஓலைச் சுவடிகள், சமஸ்கிரதச் சுவடிகள், சங்கிலிய மன்னன் குறித்த சுவடிகள், என பல அரியவகை புராதன சின்னங்களும் தீக்கிரையாகின, சுமார் 97,000 புத்தகங்கள் எரிந்த்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது எழுந்த கரும்புகை யாழ்ப்பாண வான்பரப்பின் மேல் சென்றது, அனைவரும் அதனை கண்டோம், செய்வது அறியாது திகைத்துப் போனோம். அப்போது எனக்கு 11 வயது. ஓடிப்போய் அணைக்கலாமா எனத்தோன்றியது, ஊரடங்குச் சட்டம் போட்டிருப்பதாகக் கூறினார்கள், அக்கம் பக்கத்து வீடுக்காரர் அனைவரும் ஒன்றாக்கூடினர். எரிந்துகொண்டிருக்கும் நூலகத்தில் வேறு எங்கும் கிடைக்காத பல அரிய நூல்கள் இருப்பதாகவும், சிங்களவன் திட்டமிட்ட வகையில் அதை எரிப்பதாகவும் கூறினார்கள், சிலர் புலம்பி அழுதார்கள்.

இருப்பினும் சில இளைஞர்கள் துணிச்சலாக அங்குசென்று தீயை அணைக்கப் புறப்பட்டனர், இடையில் ஆமி அவர்களை மறித்துத் தாக்கியது, ஜயோ எமது நூல்கள் எல்லம் அழிகின்றனவே என கல்விமான்களும் ஆசிரியர்களும் அழுது புலம்பினர். கேட்டானா சிங்களவன்...,

அவன் அன்று அழித்தது நூலகம் அல்ல , ஒரு இனத்தின் அடையாளத்தை, ஒரு பழம்பெரும் நாகரீகமுடைய கலாச்சாரத்தை, ஒரு இனத்தின் வரலாற்றுச் சின்னத்தை..

அன்று முதல் இன்று வரை பல அரசாங்கள் மாறியிருக்கிறது, ஆனால் அவர்கள் மனம் மட்டும் இனும் மாறவில்லை.

புலிகள் தலதா மாளிகைக்கு குண்டுவைத்துவிட்டார்கள் சந்திரவட்டப் படிக்கல்லில் சிறு காயம் ஏற்பட்டது என இன்றுவரை கொக்கரிக்கும் சிங்களம், யாழ் நூலகம் எரிந்து சாம்பலானதை ஏன் ஏற்க மறுக்கிறது. எரிந்துகொண்டிருக்கும் நூலகம் மீது உலங்கு வானூர்தியில் வந்த இராணுவத்தினர் பெற்றோலையும் ஊற்றியதாக சிலர் அப்போது கூறினார்கள் எனினும் அதை நான் பார்க்கவில்லை. அப்படி என்றால் நூலகம் முற்றாக எரிகிறதா இல்லை பாதியில் நெருப்பு நின்றுவிடுமா எனக்கூட சிங்களம் வானில் இருந்து அவதானித்திருக்கிறது. என்ன கொடுமை. அன்று அவர்கள் மூட்டிய தீ என்றாவது ஒரு நாள் அவர்களைச் சுட்டெரிக்கும் என நான் நம்புகிறேன்..

Comments