கோத்தபாயா என்னை தொலைபேசியில் என்னை மிகக்கடுமையாக மிரட்டினார்-சனல் 4 செய்தியாளர் பரபரப்பு வாக்குமூலம்
![](http://tbn3.google.com/images?q=tbn:goeTGx9dWeBWIM:http://www.nscd.org/pictures/logos/channel4.jpg)
எனது நாட்டு இராணுவத்தினர் தமிழ் பெண்களை கற்பழித்தனர் என்று நீர் செய்திகளை வெளிநாடுகளுக்கு வழங்கியிருக்கிறீர், உமது விசாவை இந்தக்கணம் முதல் ரத்துச்செய்கிறேன் உம்மை நாடு கடத்த உத்தரவு இட்டுள்ளேன் போலீசார் வந்துகொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் கோத்தபாய.
அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து சிறிது நேரத்தில் தாங்கள் சென்ற வாகனத்தை பொலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தம்மை கைதுசெய்து பொலீஸ் நிலையம் கொண்டு சென்றதாக நிக் பட்டன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றுத் தாளில் தம்மை கையொப்பம் இடுமாறு பொலீசார் தம்மை மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து வண்டி ஒன்றில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிக் பட்டன் அன்று இரவு புறப்பட இருந்த விமானத்தை தவறவிட்டதால் அடுத்தநாள் நாடுகடத்தப்பட்டுள்ளார். தற்சமயம் அவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை நிலைகுறித்து அறியத்தருகிறார்.
http://link.brightcove.com/services/player/bcpid1184614595?bctid=22698649001
Comments