"கண்ணீர்த்துளி போன்ற பயங்கரத் தீவில் நியாயம் தோல்வியடைந்தபோது! -60 வருட அரச பயங்கரவாதம்" - ரெலிகிறாவ்
பிபிசி ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் ஒரு மகிழ்ச்சியான கூட்டத்தோடு சிறிலங்காவில் பயங்கரவாதம் எப்படி வென்றெடுக்கப்பட்டுள்ளதென்பதை எங்களுக்கு கூறிக்கொள்கிறார்.
உலகமானது இந்தாட்டின் அமைதியின்மையின் அடிநிலை அடிப்படைக் காரணம் என்ன என்பதை இன்னுமே புரிந்துகொள்ளவில்லையென்றே இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.
அரச பயங்கரமானது எப்பொழுதுமே ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது இந்தக் குட்டித் தீவில். இது சிறிலங்காவின் கடல்களுக்கும் மiலைகளுக்கும் மேலாக தனது தலையை உயர்த்திய மிக அசிங்கமான கர்வம் பிடித்த அரக்கனாகவே உள்ளது.
60 வருடங்களுக்கு மேலாக, இனவெறியான சிங்களத் தீவிரவாதிகளின் ஆதரவுடன், வெற்றிபெறும் சிறிலங்கா அரசுகளானது தமிழ் சிறுபான்மையினரை அடக்கியே வந்துள்ளனர். 50களில், 60களில், 70களில் மற்றும் 80களில், இவர்கள் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை மிகக் கொடுமையாகக் கொலை செய்து, அவர்களின் உடமைகளை எரித்து, எஞ்சியோரை கப்பல்களில் அகதிகளாக நாட்டின் வடபகுதிக்கு அனுப்பிவைத்தார்கள்.
தமிழர்கள் தமது உரிமைகளைக் கேட்ட பொழுதெல்லாம், வன்முறையாகவே சிங்களத் தீவிரவாதிகள் பதில் கொடுத்தனர்.
இந்து சமுத்திரத்தின் முத்தானது இன்று அரக்கர்களின் நிலமாக மாறியுள்ளது
இப்போது மனிதஇனத்திலேயே மிகக் கொடூரமான ஒரு யுத்தத்தில் பல்;லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்றுள்ளார்கள். ஒரு பாவமும் பார்க்காமல் அப்பாவிப் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது சர்வதேசம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்துள்ளார்கள்.
தாம் செய்த கொடூரங்களை நியாயப்படுத்த “பயங்கரவாதத்துக்கான யுத்தம்” மற்றும் “மனிதாபிமான நடவடிக்கை” போன்ற சொற்களைத் தொடர்ந்து பாவித்தார்கள். பல மாதங்களுக்கு மக்களைப் பட்டினிக்குள்ளாக்கி, வயதுபோனவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மருந்தை மறுத்து காயமடைந்தவர்களையும் திறந்த வெளியில் இறக்கச் செய்துள்ளார்கள்.
வெள்ளைக் கொடிகளோடு சரணடைய வந்த புலிகளை மிகக் கொடூரமாக யுத்த மரபுகளின் வழக்கங்களை மீறி கொன்றுள்ளார்கள். அப்பாவி மக்களின் உடலங்களை புதைப்பதிலும், எரிப்பதிலும் அவர்கள் இப்போது மும்முரமாக உள்ளார்கள்.
சிறிலங்கா இராணுவமானது இரவு பகலாக சாட்சிகளை அழிக்கும் வேலையில் இறங்கியுள்ளதால், ஊடகம் மற்றும் உதவிப் பணியாளர்களை அவ்விடங்களுக்கு அனுமதிப்பதில்லை.
போர் இடங்களைவிட்டுச் சென்ற ஏனையோரை முள்கம்பிகளால் சுற்றப்பட்ட தடுப்பு முகாம்களில் வலுக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். சிறிலங்கா இராணுவமானது இவர்களில், இளையோரைப் பிரித்தெடுத்துச்சென்று விசாரிக்கிறார்கள், அதில் பலர் திரும்புவதில்லை. தமிழ்ப் பெண்கள் கற்பழிப்புக்கும் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். தலைகளிலும் கழுத்துகளிலும் ஆழ்ந்த காயங்களோடு இறந்த தமிழர்களின் உடலங்கள் முகாமுக்கு வெளியே எறியப்படுகின்றன.
உண்மை கூறுவதென்பது ஒரு குற்றமாகக் கருதப்படுவதிலும், உண்மையைக்கூறுபவர்கள் தண்டிக்கப்படுவதிலும் சிறிலங்கா உலகிலேயே ஒரு மிக மோசமான நாடாக உள்ளது. இந்து சமுத்திரத்தின் ஒரு பகுதியானது இப்போது இரத்தத்துக்கு மிகத் தாகமான அரக்கர்கள் உள்ள இடமாக உள்ளது.
உலகின் மற்றைய அனுபவசாலிகளும், அரசியல் ஆராய்வாரள்களும் சிறிலங்காவின் ஆழமான பிரச்சினைகளைக் காணத்தவறிவிட்டார்கள் அல்லது வேண்டுமென்றே ஒரு மிகப் பெரிய மனித அழிவு வருவதற்குரிய ஒழுங்குமுறையைப் பாவித்துள்ளார்கள்.
பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளாமல் தீர்வுகளை செயற்படுத்துவது அப்பாவி உயிர்களைப் பலியாக்கும். இதற்கு சிறிலங்காவில் நடந்தது ஒரு நல்ல சாட்சி.
சிறிலங்காவின் நோய் 60 வருடங்களுக்கு மேல் தொடரும் அரச பயங்கரவாதமாகும். அடிப்படை பிரச்சினையைத் தீராவிடில், அடக்கப்பட்டவர்களினது குரல் சிறிலங்காவில் இன்னும் சத்தமாகக் கேட்டுக்கொண்டே இருக்கும்.
பிபிசியும,; மற்றைய ஊடகங்களும், அமைப்புகளும், எப்போது சிறிலங்கா யுத்தத்தின் வெற்றியைக் கொண்டாடவெளிக்கிட்டார்களோ அப்போதே மனிதாபிமானம் இழக்கப்பட்டுவிட்டது.
தலையுள்ள ஆனால் இதயமில்லாத மக்கள் உள்ள உலகத்திலே பிரச்சினைகள் உள்ள இடங்களுக்கு சமாதானம் கொண்டு வரமுடியாது.
எமக்கு மிக அவசரமாகத் தேவையானது அடக்கப்பட்ட மற்றும் துன்பப்பட்ட மக்களுக்கு இரங்கும் இதயம் உள்ள தூதுவர்களாகும்.
தமிழர்களின் கதை
பிரித்தானிய ஆட்சியின் முன்பு சிறிலங்காத் தமிழர்களுக்கு அவர்களது சொந்த நாடு இருந்தது. 1948இல் சுதந்திரத்தைக் கொடுக்கும் போது, பிரித்தானியர்கள் ஒரு நாடாக இயங்கவே விட்டுச் சென்றனர். சுpறிலங்காவில் ஜனநாயகம் தோத்தது. ஏனெனில் வந்த அரசுகள் யாவும் பெரும்பான்மையினரான சிங்களவர்களாலேயே தெரிந்தெடுக்கப்பட்டனர்.
சிங்கள புத்தத் தீவிரவாதிகளின் ஆதரவுடன், சிங்கள அரசுகள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக பெரும்பான்மையினரைத் திருப்திப் படுத்துவதிலேயே இருந்தனர். தமிழர்களை வேறுபடுத்தும் கொள்கைகளை கல்வி, வேலை மற்றும் ஏனையவற்றில் கொண்டுவந்தனர். சிங்கள மொழியானது நாட்டின் ஒரே அதிகார மொழியாக்கப்பட்டது. துமிழர்கள் இரண்டாந்தரப்பு பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.
தமிழர்களை நாசீ ஆட்சிக்குள் வாழ்ந்த ஜுயிஷ் மக்களோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.
சிங்கள அரசுகளானது தமிழர்களைக் கொலை செய்வதற்கும், அவர்களின் உடமைகளை அழிப்பதற்கும் பல தடவைகள் தங்கள் காவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
1983இல் 2000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்க்கையை இழந்தனரர். யாவருமே சிங்களவர்களால் கொலை செய்யப்பட்டனர், தெற்கு சிறிலங்காவில். பாடசாலைகளிலும், சிறைச்சாலைகளிலும், வைத்தியசாலைகளிலும், மற்றும் தேவாலயங்களிலும் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
தமிழர்களின் வரலாற்றை அழிப்பதற்காக தமிழ் நூலகங்கள் தூசாக எரிக்கப்பட்டன.
சிறிலங்கா இனி காயப்படக்கூடிய மக்களுக்கான பாதுகாப்பான இடம் இல்லை
துக்ககரமாக, நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதாபிமான அழிவு எங்கள் கண்முன்னே நடந்துகொண்டிருக்கிறது.
நாங்கள் இன்னும் மனிதர்கள்தான் என்று உலகுக்குக் காட்டுவதற்கு நாங்கள் செய்யக்கூடிய ஒரு நல்ல விடயம் அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவது ஆகும்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் கொலை வெளிகளிலே விடப்பட்டுள்ளனர், தடுப்பு முகாம்களில் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவிடம் இருந்து அனுமதிக்காக காத்திருக்கப் போகிறோம் என்றால், அது ஒருகாலமும் நடைபெறாது. அப்பாவி மக்களின் உடலங்களைப் புதைப்பதில் மும்முரமாக நிற்கும் கொலையாளி எங்களை அங்கு அழைத்து தான் எப்படிக் கொடூருமானவன் என்று காட்டப்போவதில்லை.
கொடூரமான சிறிலங்கா ஆட்சியின் கைகளில் இறந்து கொண்டிருக்கும் தமிழர்களைக் காப்பதற்கு உடனடியாக அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
பிரித்தானியா ரெலிகிறாவ் செய்தியிலிருந்து- றிச்சர்ட் டிக்சன்
Comments