பிரித்தானியாவில் தமிழர்களுக்கான உன்னத போராட்டத்தின் 8 வது நாளில் ரிம் மாற்றின்

கடந்த 50 நாட்களாக பிரித்தானிய தமிழ் மாணவர்களால் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் முன்னெடுக்கும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் தொடங்கிய பின்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறீலங்க அரசாங்கத்தால் அநியாயமாக இனப்படுகொலை செய்யப்பட்ட போதிலும் மனம் தளராது தடுப்பு முகாம்களில் வாழும் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சர்வதேச தொண்டு நிறுவனத்தின் ஊடாக தமிழர்களுடன் நன்கு பழகியதன் காரணமாக இன்று 8 ஆவது நாளாக ரிம் மாற்றின் அவர்கள் ஆகாரமின்றி உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றார்;. இவருடைய இந்த தியாகத்தை மதித்த தமிழ் இளையோர் மற்றும் மாணவர்கள் அவரை தினம் சந்தித்து அவரின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மதிப்பளித்து வருகின்றனர்.

இதேவேளை தமிழர்களுக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தை இடை நிறுத்தாமல் வேறு வேறு விதமான கவனயீர்ப்பாக மேற்கொள்ளுவோம் என பிரித்தானிய தமிழ் மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்

Comments