சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டி கனடியத தமிழ் மாணவர் சமூகமும், கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி நடத்த எற்பாடாகியுள்ளது
இப்பேரணியில் பின்வரும் கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன.
உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை வான் வழியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சிறிலங்கா அரசுக்கு எதிராக இராஜரீக, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்,
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கனடிய அரசு அங்கீகரிப்பதன் ஊடாக நிரந்தர சமாதானத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்,
‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி வருகின்ற 13ம் திகதி, புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு குயின்ஸ் பார்க் ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்பாக
நடைபெறவுள்ளது.
இந்த வருடத்தில் ரொறன்ரோவில் நடைபெறும் மூன்றாவது மனிதச் சங்கிலிப் பேரணி என்பது குறிப்பிடத்தக்கது
உரிமைக்கும் உறவுகளுக்கும் குரல் கொடுப்போம்!
தொடர்புகளுக்கு: 416-875 5056
Comments