பான் கீ மூன் சென்ற உலங்கு வானூர்தியில் எடுக்கப்பட்ட திடுக்கிடும் புகைப்படங்கள்


இலங்கை சென்றிருக்கும் ஜ.நா செயலாளர் இன்று மொனிக் பாம் தடுப்பு முகாமிற்கு உலங்கு வானூர்திமூலம் சென்றார். அவரது வானூர்தி உக்கிர போர் நடைபெற்ற இடங்களுக்கு மேலாகப் பறக்கும்போது செய்தியாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் ஒரு மக்கள் குடியிருப்பில் 90 வீதமான கூடாரங்கள் மற்றும் கட்டிடங்கள் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளது தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது.

பல அழிவுகளைச் சந்தித்து மயான பூமியாகக் காணப்படும் பல இடங்களை உலங்கு வானூர்தியில் பார்வையிட்டவாறு சென்ற பான் கீ மூன், மொனிக் பாம் மக்களிடம் குறைகளை கேட்டறிந்துகொண்டார். அதிக நேரம் ஒதுக்கி அவர் அங்கு நிலமைகளை கேட்டறிந்ததாக செய்தியாளர் அறியத்தருகிறார்.

பல குடியிருப்புகளும், காப்பகங்களும், மற்றும் பாடசாலைகளும் இவ்வாறு அழிந்து காணப்படுவது அங்கு எவ்வளவு கொடுமையான யுத்தம் ஒன்று நடந்திருக்கும் என்பதை நன்கு காட்டுகிறது.

http://d.yimg.com/a/p/ap/20090523/capt.526ea0a5c77042f1bf12f44e3864c8db.sri_lanka_civil_war_lkw144.jpg?x=253&y=345&q=85&sig=vgjhFdfN8Wchdhxelsn0Cg--


Comments