இதன் விபரங்கள் இன்று 13.05.2009 வெளியிடப்பட்டுள்ளது. இதில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடும் ஆட்டிலறித் தாக்குதல் மேற்கொண்டிருப்பது தெட்டத் தெளிவாக புலப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனரக ஆயுதங்களை தாம் பயன்படுத்தவில்லை எனக் கூறிவரும் இலங்கை அரசுக்கு இன்றைய தினம் அதிர்ச்சி
சமீபத்தில் ஜ.நா எடுத்த புகைப்படங்கள் பெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
AAAS என அழைக்கப்படும் அமெரிக்க நவீன விஞ்ஞான அமைப்பு, தமது அதி சக்திவாய்ந்த முப்பரிமான செயற்கைக் கோளை பயன்படுத்தி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. இதில் 6 ம் திகதி மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை 10 ம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது அங்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவுகள் துல்லியமாக புலப்படுகிறது.
அத்துடன் 2006 ம் ஆண்டு இப்பகுதியை இந் நிறுவனம் படம் எடுத்துள்ளது, அத்துடன் தற்போது எடுக்கப்பட்ட படங்களுடன் ஒப்பிடும் போது பல அழிவுகளை இவ்விடம் சந்தித்திருப்பதை தாம் உணர முடிவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எது எப்படி இருப்பினும் கனரக ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் மக்கள் செறிந்துவாழும் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பாவித்துவருவதை இந்த செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் (HRW) மே மாதம் 6ம் திகதி 9, மற்றும் 10ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியை தனியார் செயற்கைக் கோள் நிறுவனத்தின் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளது.
Comments