வன்னிக்களப் பகுதியில் இப்போது நடப்பது என்ன? அதிர்ச்சித் தகவல்!!

வன்னிக்களப் பகுதியில் உண்மை நிலையைக் கண்டறிய சர்வதேச பத்திரிகையாளர்களை அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் மெள னம் சாதித்து வருகின்றது.

அங்கே நிலைமை களைச் சரிசெய்த பிறகு அனுமதிப்பதாக அரசா ங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது வன்னியில் நடப்பது என்ன? எமக்கு க் கிடைத்த சில தகவல்களை இங்கே தருகின் றோம்.

வன்னிப் போர்க்களத்தில் இப்போது ஆயிரக்கணக்கான மக்களின் உடல்கள் சிதை ந்தும், குற்றுயிரும் குலையுயிருமாகவும் கிடக்கின்றன.

பல கிலோமீட்டா் பரப்பள வுக்கு பிணவாடையும், படையினர் வீசிய ரசாயன குண்டுகளின் கோர தாக்கமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைவிட பெருமளவான இறந்த மக்களின் உடல் களை புல்டோசர்களில் கொண்டு புதுமாத்தளன் கடலில் கொட்டுவதாகவும் தகவ லொன்று தெரிவிக்கின்றது.

படையினரால் பாவிக்கப்பட்ட இரசாயனத் தாக்கங் கள் இன்னும் இருப்பதால் கடலில் பெருமளவான மீனகள் செத்து மிதந்து வருகின் றனவாம்.

சர்வதேச பார்வையாளர்கள் வருவதற்குள் அங்குள்ள தமிழ் மக்களின் இறந்த உடல்களை உருத்தெரியாமல் அழிக்கும் பணியில் வாயையும் மூக்கையும் மாஸ்க் அணிந்துகொண்ட பெருமளவான படையினர் மும்முரமாக ஈடுபடுத்தப் பட்டு வருகின்றனர். இதற்காக புல்டோசர்கள் வைத்து அனைத்தை யும் அகற்றும் வேலையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.

அத்துடன் தமிழர்களது கட்டடங்கள் அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு வருவதுடன் அங்கு போர் நடை பெற்றது என்பதற்கான அடையாளமே இல்லமல் செய்யப்பட்டுக் கொண்டி ருப்பதாக இராணுவத் தரப்பிலிருந்து நம்பகமான தகவலொன்று தெரிவிக்கின்றது.

இதையும் மீறி போர்ப் பகுதிக்குச் செல்வோம் என எந்த நாடு கோரினாலும், அங்கு ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், என்ன நடந்தாலும் நாங் கள் பொறுப்பேற்க முடியாது என்றும்அரசாங்கம் கூறுவதால், யாரும் அப்பகுதிக் குப் போக அஞ்சி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments