வெளிப்படையாக தமிழர்களை ஏமாற்றும் சர்வதேச சமூகம் கொழும்புடன் பேச்சு நடாத்தி அதனை ஒரு இணக்கத்திற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச நாடுகளுக்கு உள்ள வரையறை அல்லது எல்லை என்ன?
அத்தோடு தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதவற்கு சர்வதேச நாடுகளுக்கு உள்ள வரையறை அல்லது எல்லை என்ன? எனக் கேள்வி எழுப்பினார் ஒஸ்லோவில் தொடர்ந்து 8வது நாளாக உண்ணா நோன்பை நோற்கும் திரு. சிறி நவரட்னம் அவர்கள்.
அவர் மேலும் கூறுகையில் தமிழர்களை ஏமாற்றுவதற்கு சர்வதேசத்திற்கு வழிவகை செய்யும் விதத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ திங்களன்று கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லை என அறிவிப்பு செய்கின்றார்.
165000 மக்கள் செறிந்து வாழும் பாதுகாப்புவலையம் என அழைக்கப்படும் பிரதேசத்தில் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என்ற அறிவிப்பை எல்லோரும் வரவேற்கின்றனர். அவ்வாறாயின் சிறு ஆயுதங்கள் கொண்டு தமிழரை அழிப்பது ஏற்புடையது என்றாகின்றது.
இது ஒரு பெரும் நகைச்சுவை. அத்தோடு கனரக ஆயுதங்கள் மீதான வாக்குறுதியைக் காக்குமாறு ஐ.நா சபை கெஞ்சி மண்டாடுகின்றது. ஆனால் கொழும்பு தொடர்ந்தும் வான் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதம் கொண்டு தாக்குதல் என்பனவற்றை நிகழ்த்தி வருகின்றது என்றார் திரு. சிறி நவரட்னம் அவர்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை இரு இந்திய அதிகாரிகளோடான சந்திப்பில் போரை இன்னும் நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டுவர அரசு முடிவெடுத்ததாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு அதனை நடைமுறைப்படுத்த மிகப்பெரும் மனித அவலத்தை விலையாகக் கொடுக்க கொழும்பு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவ்வகையான இந்திய அரசின் நிகழ்சி நிரலை தழிழ் மக்கள் ஏற்கப்போவதில்லை. அத்தோடு சர்வதேச அரசுகளின் அறிக்கை அரசியலின் பின்னனியில் ஒரு பெரும் சந்தேகம் எழுப்பப் படுகின்றது.
சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக மிகவும் பிரபல்யப்படுத்தப்பட்ட விஜயமான பிரித்தானிய பிரான்ஸ் மற்றும் சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர்களின் விஜயம் புதனன்று நடைபெருகின்றது.
அது போரின் வெற்றியைக் கொண்டாடுவதோடு இபோரின் பின்னரான நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுவதற்காகவே என நம்பப்படுகின்றது. திரு. ஜோன் ஹொம்ஸ் இந்நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே கொழும்பில் தங்கியுள்ளார்.
இதுவரை காலமும் புலிகளின் மீது குற்றம் சாட்டி வந்த ஐ.நா சபையும் சர்வதேச சமூகமும் கடந்த திங்கள் கிழமை வெளியேறிவந்த மக்களை வரவேற்க அங்கு இருக்கவில்லை. மக்களின் விடுதலை என்று அவர்கள் கூறும் நிகழ்வுக்கு அங்கிருந்து வசதி செய்து கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் அங்கு இருக்கவில்லை என்றார் திரு. சிறி நவரட்ணம் அவர்கள்.
அவர் மேலும் கூறுகையில் கைப்பற்றப்பட்ட மக்களின் விதி பாதுகாப்பு சுதந்திரம் என்பனவற்றை தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இனப்படுகொலை அரசான இலங்கை அரசிடம் கொடுத்தமையானது சர்வதேசத்தின் மிகவும் கேவலமான ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
கைப்பற்றப் பட்ட மக்களில் பலர் இன்னமும் பதியப்படவில்லை 16000 மக்கள் வவுனியாவிலும் 5000 மக்கள் யாழ்ப்பாணதில் பதியப்பட்டுள்ளனர். மீதமானவர்கள் இன்னமும் கணக்கில் எடுக்கப்படவில்லை. அவர்கள் இன்னமும் இராணுவ வலையத்தினுள்ளேயே வாடுகின்றனர். பலர் வவுனியாவிற்கு இரகசியமாக வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை கையாள்வதில் புலிகள் மிகவும் திறமைவாய்ந்தவர்கள் என்பதை பலமுறை நிருபித்துள்ளனர். ஆனால் ஐ.நா சபையும் சர்வதேச சமூகமும் சிங்கள அரசும் இம் மக்களைக் கையாள்வதில் பலசிக்கல்களை எதிர் நோக்குவதாக வவுனியாவில் தமிழ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவர்களின் நோக்கம் புலிகளிடமிருந்து மக்களைப்பிரிப்பது மட்டும் தான். அதன் பின்னரான மனிதாபிமான உதவிகளைச் செய்வதில் நாட்டம் காட்டவில்லை என புலம் பெயர் தமிழ் சமூகம் சுட்டிக்காட்டுகின்றது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகலையைத்தான் நீங்கள் விரும்புகின்றீர்களா?
அப்படியாயின் அதனை வெளிப்படையாகக் கூறுங்கள்.அப்போதுதான் தமிழர்கள் நாம் எங்கிருக்கின்றோம் என்பதை எம்மால் அறிய முடியும் . ஏமாற்றுதல் தீர்வல்ல. அதற்கு ஒருநாள் நீங்கள் பதில் கூறியே ஆகவேண்டும் என்றார் திரு சிறி நவரட்ணம் அவர்கள்.
திரு.சிறி நவரட்ணம் அவர்கள் தமிழர்களைக்காக்க ஒஸ்லோ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி ஒஸ்லோவில் உண்ணா நோன்பு நோற்று வருகின்றார். 51 வயதான திரு. நவரட்ணம் அவர்கள் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
www.tamilkathir.com
Comments