ஜெயலலிதாவின் குரல் ஈழத்தில் விடியலை உறுதிசெய்ய வேண்டும்: மலேசிய தமிழர்கள் வாழ்த்து

இந்தியாவில் இருந்து ஒலிக்கும் ஜெயலலிதாவின் குரல் ஈழத்தில் விடியலை உறுதிசெய்ய வேண்டும் என்று மலேசிய தமிழர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மலேசிய தமிழர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலகத் தமிழர்களின் வாழ்வியல் கனவான தமிழீழக் கோட்பாட்டை ஏற்று அதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்பேன் என கூறியதன் மூலம் உலகத் தமிழர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை ஜெயலலிதா பெற்றுவிட்டார். மலேசிய தமிழர்களும் இந்த உறுதிமொழியால் பேருவகை கொள்கின்றனர்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் 35 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான போராளிகளின் குருதியினால் அந்த மண் வீரம் பூண்டு நிற்கின்றது.

அப்பாவி மக்களின் கண்ணீராலும் குருதியால் அந்த மண் சிவந்துள்ளது. தமிழீழம் தமிழர்களுக்குரிய மண். மீட்டெடுக்க முடியா இழப்புகளுக்கு முகம் கொடுத்தப் பிறகு அந்த மண் கண்டிப்பாக அந்த மக்களுக்கு கிடைத்தாக வேண்டும்.

அதனை மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். யாருமற்ற ஏதிலிகளாக தமிழர்கள் போராடிக் கொண்டிருந்த வேளையில் ஒலித்த அவரின் குரல் நம்பிக்கை விதைகளைத் தூவி இருக்கின்றது.

ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு மட்டுமே நிரந்தர விடிவினைக் கொண்டு வரும். அடக்குமுறையில் இருந்தும் இனப்படுகொலையில் இருந்தும் அவர்கள் மீண்டுவர வழியமைக்கும். இதனை வலியுறுத்தி தமிழகத்தின் எல்லா திசையிலும் தங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.

தனிநாடு அமைவதற்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் தாங்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

உலகத் தமிழர்களின் அடையாளமாய், அன்னை பூமியாய் தமிழீழத் தாயகம் மலர தாங்கள் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு தமிழீழ மக்களின் வாழ்வு மலர பாடுபட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்:

Ø "ஈழத் தமிழர்களுக்கு நீங்களே இன்று எதிர்காலம் பற்றிய நம்பிக்கை": ஜெயலலிதாவுக்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து

Ø "உங்கள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும்": ஜெயலலிதாவுக்கு பிரான்ஸ் தமிழ் இளையோர்கள் வாழ்த்து

Ø இருளினைத் துடைத்தெழுந்த உதயதாரகை போல உங்களின் தனித் தமிழீழ அறிவிப்பு: ஜெயலலிதாவுக்கு அமெரிக்காவில் இருந்து அமைதிகாண் அமைப்பு வாழ்த்து

Ø எம்.ஜி.ஆரின் கொள்கை உறுதிப்பாட்டை உங்களில் காண்கின்றோம்: ஜெலலிதாவுக்கு நோர்வே அன்னை பூபதி கலைக்கூடம் பாராட்டு

Ø
உங்கள் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் பின்னால் உலகத் தமிழனம் துணையிருக்கும்: ஜெயலலிதாவுக்கு நோர்வே தமிழர்கள் ஆதரவு

Ø இதயக் கதவுகள் திறந்து 'தனி ஈழம்' அமைப்பேன் என்ற நீங்களே எம் நம்பிக்கை ஒளி: இத்தாலிய தமிழர்கள் ஜெயலலிதாவுக்கு நன்றி

Ø தமிழீழ விடுதலையை ஜெயலலிதாவின் பாசப் பிணைப்பு விரைவுபடுத்தும்: சுவிஸ் தமிழர் பேரவை

Ø உலகம் கைவிட்ட மக்களை ஈழம் அமைத்து நீங்கள் காப்பாற்றுங்கள்: ஜெயலலிதாவிடம் கனடிய தமிழ் பட்டதாரிகள் வேண்டுகோள்

Ø நீங்களே எங்கள் நம்பிக்கை; புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் நீங்கள் வாழுங்கள்!: ஜெயலலிதாவுக்கு அவுஸ்திரேலிய தமிழர்கள் வாழ்த்து

Ø "ஈழத் தமிழர் ஆதரவுக் கோட்டை வெல்லட்டும்!" - ஜெயலலிதாவுக்கு அமெரிக்க தமிழர்கள் வாழ்த்து!

Ø ஜெயலலிதாவுக்கு நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிப்பு

Ø ஜெயலலிதாவின் "தனி ஈழ" நிலைப்பாடு: கனடிய தமிழர்கள் மகிழ்வு; வரவேற்பு!

Comments