புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் அறிவிப்பை புலம் பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை

நேற்றைய தினம் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றினூடாக பத்மநாதன், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்ததாக ஒரு செய்தியை மக்களுக்கு தெரிவித்திருந்தார். அக்கருத்தை புலம் பெயர் மக்கள் ஏற்றுகொண்டனரா என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் என்ற நிலையில் இருந்து அவர் தன்னை நகர்த்தி இனி தான் தான் தலைவர் என்ற கருத்தையும் தொலைக்கட்சியூடாக முன்வைத்திருந்தார். இருப்பினும் ஈழத்தில் இன்னமும் புலிகள் முற்றாக அழிக்கப்படவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. அங்கிருந்து அவர்கள் சமீபத்தில் தமிழ்நெட் இணையத்தை தொடர்புகொண்டு புலிகளின் தலைமை பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், தகுந்த நேரத்தில் அது சாட்சியத்துடன் வெளிவரும் எனவும் தெரிவித்திருந்தனர்.

எனவே புலம் பெயர் மக்கள் விடுதலைப் புலிகளின் களப்போராளிகளின் கூற்றையே நம்புவதாக தெரிகிறது. அதாவது களத்தில் இருக்கும் விடுதலைப் புலிகளின் கூற்றையே இனி நம்புவது என்ற கோட்பாட்டில் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக, நூற்றுக்கணக்கான மின்னஞ்சல் எமக்கு கிடைகப்பெற்றிருக்கின்றன.

எனவே ஈழத்தில் இருந்து புலிகள் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் தொடர்புகளை விரைவில் மேற்கொள்வார்கள். கடுமையான யுத்தம் ஒன்று நடைபெற்று ஓய்ந்துள்ள இந்த நிலையில் அங்கிருந்து அவர்கள் தொடர்புகளை மேற்கொள்ள, மற்றும் அவர்கள் பாதுகாப்பு என்பனவற்றை நாம் கருத்திற்கொண்டு, அவர்களின் வாக்குக்காக நாம் காத்திருக்கவேண்டுமென என நாம் கருதுகிறோம்.

களத்தில் இருக்கும் விடுதலைப் புலிகளே எமது தற்போதைய ஏக பிரதிநிதிகள் என்று புலம் பெயர் தமிழ் மக்கள் கருதுவதாக எமது இணையம் உள்வாங்கிக்கொண்ட மக்கள் கருத்தில் இருந்து தெரியவருகிறது.

இது மக்கள் கருத்து. அதிர்வு இணையம் எந்தவிதமான சொந்தக் கருத்துக்களையும் இங்கு திணிக்கவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.

Comments

//புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் அறிவிப்பை புலம் பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை//

மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.ஒருவேளை வீரச்சாவடைந்திருப்பாரோ என்றும் பதறுகிறது.
உலகின் கடைசித்தமிழன்(தமிழனுக்கு பிறந்தவன்) உயிரோடு இருக்கும் வரை எமது தலைவன் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது இவர்களின் தில்லு முல்லுகளிலிருந்து உறுதி யாகிவிட்டது