அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா எனக் காத்திருக்கும் அனாதைக் குழந்தைகள்

அம்மா ஒரு நாள் வீட்டிற்கு வருவா என தடுப்பு முகாம்களில் பல சிறார்கள் காத்திருக்கின்றனர்..... என்ன கொடுமை இது, அவர்கள் இறந்ததைக் கூட விளங்கிக்கொள்ள முடியாதவர்களாக எமது சிறார்கள் தடுப்பு முகாம்களில் தமது தாய் தந்தையர் ஒரு நாள் வருவார்கள் எனக் காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் புல்மோட்டை தடுப்பு முகாமிற்கு விஜயம்செய்த, பணியாளரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கண்ணீர் மல்க கூறிய கதை நெஞ்சை உருக்கியது. தடுப்பு முகாம்களில் பல குழந்தைகள், தமது சகோதரருடன் இருப்பதாகவும், அவர்களின் தாய் தந்தையர் இறந்த விடையம் தெரியாத நிலையில் அவர்கள் ஒரு நாள் தம்மை பார்க்கவருவார்கள் என்று கூறியவாறு, அரை குறை உடுப்புடன் அங்கே சிறார்கள் இருப்பதாக ஒரு வெளிநாட்டவர் குறிப்பிட்டார்.

அந்தச் சிறார்களுக்கு தமது தாய் தந்தையர்கள் இறந்திருப்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் கூடவராத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம் பெயர் வாழ் எம் உறவுகளே, நீங்கள் விரும்பினால் அவர்களில் ஒருவரை தத்தெடுத்து வளக்கலாம். வீட்டிற்கு ஒருவராக நாம் அவர்களை தத்தெடுத்து வளர்ப்பதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிகள் பாதுகாக்கப் படுவார்கள். சற்றே சிந்தியுங்கள், ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது ஏற்கனவே சிறார்களுக்கு உதவும் ஒரு அமைப்பினூடாக இவர்களை தத்தெடுக்க ஆவணம் செய்யுமாறு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.

Comments