கடந்த இரு தினங்களாக நடைபெற்ற இந்த அமர்வின்போது பல சர்ச்சைகள் முன்னெப்போழுதும் இல்லாதவாறு தோண்றியதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். தந்திரமாக நிலமையைக் கையாண்ட இலங்கை, முதலில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்சியா ஊடாக தனது அழுத்தத்தைப் பிரயோகித்தது. இதன் காரணமாக, மனித உரிமைக் கழகத்தில் ஆசிய நாட்டவர் மற்றும் மேற்க்கு நாட்டவர் என இரு அணிகளாக பிளவுபட்டது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிராக இலங்கை இரு அறிக்கையை அவசரமாக தயாரித்தது. முறையே மேற்கத்திய நாடுகள் தயாரித்த அறிக்கை மீது விவாதம் நடைபெறாமல், இலங்கை தயாரித்த அறிக்கை மீது விவாதம் இடம்பெற்று, இன்றைய தினம் வாக்கெடுப்பு நிகழ்ந்துள்ளது. அதில் இலங்கை சமர்ப்பித்த யோசனைகள் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பல நடைமுறைக்குச் சாத்தியமற்ற தகவல்களையும், தீர்மானங்களையும் அறிக்கையாகச் சமர்ப்பித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்கழித்துள்ளன, எதிராக 12 நாடுகளும் 6 நாடுகள் இந்த தேர்தலில் நடுநிலை வகித்ததும் தமிழர்களுக்கு மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும். நல்ல ஒரு சந்தர்ப்பத்தை, மற்றும் இலங்கை அரசாங்கத்தை கண்டிக்க ஜ.நா மனித உரிமைக்கழகம் தவறிவிட்டதாக மேற்கத்திய தூதுவர்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.
கடைசி நேரத்தில் ஆசிய நாட்டின் மீது மேற்கத்தைய நாடுகள் கண்டன தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரக் கூடாது என்று ஒரு பிரம்மையை உருவாக்கி, இலங்கை பிரச்சனையை, ஒரு ஆசிய கண்டத்தின் பிரச்சனையாக மாற்றி, அதில் வெற்றிபெற்றிருக்கிறது, சீனா, இந்தியா, மற்றும் ரஷ்சிய நாடுகள். மொத்தத்தில் மேற்கத்தைய நாடடுகளா இல்லை ஆசிய நாடுகளா பலம் பொருந்தியவை எனப் பலப்பரீட்சை இங்கு நடைபெற்றிருக்கிறது.
இதை அறியாமல் தமிழர்களாகிய நாங்கள் ஒரு விடிவு கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்திருக்கிறோம். இலங்கைத் தீவில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டிக்கக் கூட நாதியற்ற நிலையில் ஜ.நா மனித உரிமைக் கழகம்... இலங்கையில் நடந்தது மனிதப்படுகொலை இல்லை என்று 29 நாடுகள் கூறினால் அது உண்மையாகிவிடுமா ? தற்போது இலங்கை அரசு முன்வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு 29 நாடுகள் கோரியுள்ளது.
Comments