தமிழீழ தேசிய தலைவரின் பெற்றோர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கபட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. முன்னர் இந்தியாவில் திருச்சியில் வாழ்ந்துவந்த இவர்கள் சமாதானக் காலப்பகுதியில் (2003) இலங்கை வந்ததாகக் கூறப்படுகிறது.
76 வயதாகும் தந்தை திருவெங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் 71 வயதாகும் தாயார் பார்வதி ஆகியோரையே இலங்கை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வயது முதிர்ந்த காலத்தில் இவர்களை சட்டத்திற்கு புறம்பான முறையில் கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது குறித்து மனித உரிமைக் கழகங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க புலம்பெயர் மக்கள் ஆவன செய்யவேண்டும் என அதிர்வு இணையம் வேண்டி நிற்கிறது.
அத்துடன் இவர்கள் இருவரும் எச் சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசுக்கு எதிராக செயல்ப்பட்டவர்கள் அல்லர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments