அவசரவேண்டுகோள் சற்றுப் பொறுமை காத்திடுங்கள்--அம்பாரை தமிழர் ஒன்றியம்

மக்களே தமிழர்களுக்குச் சாதகமில்லாத பல தகவல்கள் இலங்கை இராணுவத்தால் வெளியிடப்படுகிறது. சற்றுப் பொறுமை காத்திடுங்கள். இலங்கை இராணுவம் கூறிவருவதை ஆதாராபூர்வமாக நிரூபிக்க முடியாது.

தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடலங்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம்,

இவராக இருக்கலாம் என இராணுவம் கூறிவருகிறது. இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக நாம் அறிகிறோம். அத்துடன் இந்த சிறு பரப்பளவும் தற்போது இராணுவத்தின கட்டிப்பாட்டில் வந்துள்ளதாக, படையினர் அறிவித்துள்ளனர்.

போராளிகளின் இழப்புக்களைக் காட்டி போராட்டத்தை நசுக்க நினைக்கும் எதிரிக்கு துணை போவதை நிறுத்துவோம். எம்மத்தியில் ஆயிரம் நடேசன்களும்.. ரமேஸ்களும்.. சாள்ஸ் அன்ரனிகளும் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கையோடு.. எமது தாயகத்தை மீட்கும் வரை சாத்தியமான வழிகளில் எல்லாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே இன்றைய எமது உறுதி மொழியாக அமைய வேண்டும்.

ஒப்பாரிகளும்.. கவலைகளும்.. ஒருபோதும் விடுதலை பெற்றுத்தராது. எதிரி எம்மை இராணுவ ரீதியில் மட்டுமன்றி உளவியல் ரீதியில் வென்று கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. எமது தாயகம் என்பது எமது பூர்வீகச் சொத்து. அதனை எதிரியிடம் எக்காரணம் கொண்டும் இழக்க நாம் முடியாது.

எமது தாயகம் மீட்கப்படுவதே மாவீரர்களுக்கும் மாண்ட மக்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலியாக இருக்க முடியும்..! அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவதை விட்டு எதிரியின் உளவியல் போருக்கு உந்து சக்தியாக இருப்பதை நிறுத்துவோம்.

எம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை நாம் அறிவோம் அவர்கள் நிச்சயமக பழிவாங்கப்படுவார்கள். நாம் சர்வதேசத்தை எம்

மக்களை காக்க என அழைத்தபோது எந்த நாயும் வரவில்லை ஆனால் யுத்தம் முடிந்துவிட்டது என்று எம்மக்களின் உரிமைகள் தீர்க்கப்படாது இந்த வெள்ளைகார, ஆசிய நாட்டு நாசமாய் போனவனுகள் எல்லாம் வர்த்தகநோக்குடன் வருவீர்கள்தானே உங்களை கவனிக்க நாம் தயாராகவுள்ளோம்.

----அம்பாரை தமிழர் ஒன்றியம்----

Comments

Anonymous said…
இனி இலங்கை மக்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்.. நாடு பொருளாதார பாதையில் முன்னேறும்……..தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள்…
Anonymous said…
இனி இலங்கை மக்களின் வாழ்வு நிம்மதியாக இருக்கும்.. நாடு பொருளாதார பாதையில் முன்னேறும்……..தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள்…
Indian said…
ha ha good pipe dream.. ur finished.. thats the truth
ஆமாம் இப்போதே கொழும்பில் தமிழர்களுக்கு சுயமரியாதை தொடங்கி விட்டது

அடுத்து முஸ்ஸிமுக்குத் தான்

எழுதி வையுங்கள்