ஸ்ராஸ்பூர்க் நகரில் விவாதம். தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழம் தான்.

நேற்று செவ்வாய்க்கிழமையன்று பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடைபெற்றிருந்த இலங்கைத்தமிழரின் எதிர்காலம் என்ன? என்ற விவாதமையத்தில் தமிழ் மக்களின் சார்பில் விரிவுரையாளர் திரு. நெல்சன் ( Mr. Neelsen, Tubingen University Professor ) அவர்களும், திரு. சுகிர்தராஜா (Mr. Julia, retired professor of the University of Lyon ) அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளையில் இந்த விவாதத்தில் பல ஊடகவியலாளர்களும், பல சமூக அமைப்புக்களைச் சார்ந்தவர்களும், யுனிசெவ் அமைப்பின் பேசவல்ல அதிகாரி ஒருவரும், குறிப்பாக குருதிஸ்தான் இன மக்களும் மிக ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டனர்.

ஆரம்பத்தில் விரிவுரையாளர் திரு நெல்சன் அவர்கள் தமிழீழ வரைபடத்துடன் விளக்கங்களை ஆரம்பித்திருந்தார். ஆரம்ப கால ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளின் அடிப்படையில் ஆண்டுகளை மையப்படுத்தி சிறிலங்கா என்ற நாட்டில் இரண்டு இனங்கள் தமக்கே உரிய மொழி, கலை, கலாச்சாரம், நிலப்பரப்பு என்பவற்றில் வேறுபட்டு வாழ்ந்தமைக்கான ஆதாரங்களை எடுத்து விளக்கியதுடன் தமிழ் மக்களினுடைய பூர்வீக நிலம் தமிழீழம் என விலியுறுத்தியதுடன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சர்வதேசத்தால் பயங்கரவாத அமைப்பு எனக் கூறிவரும் போதிலும், அது ஒரு மக்களின் விடுதலைக்காக போராடும் அமைப்பு என்பதே உண்மை என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

திரு. சுகிர்தராஜா (யூலியாமாஸ்ரர்) அவர்கள் தெரிவிக்கையில் சிறிலங்கா அரசு சர்வதேசத்துடன் வைத்திருக்கும் இராஜதந்திர தொடர்புகள் பற்றி உரையாற்றியதுடன் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள ஒன்று கூடல்களில், பிரஞ்சு மக்களாகிய நீங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இணைந்து தமிழினத்திற்கான விடுதலையைப் பெற்றுக் கொடுங்கள் எனவும் உணர்வுடன் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத்தமிழரின் எதிர்காலம் என்ன? என்ற விவாதத்தை பிரஞ்சுக் குடிமகன் தலைமை தாங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments