சற்று முன்னர் முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இவை. எறிகணைகள் பல்குழல் எறிகணைகள் என்பன வந்து வீழ்வதால் பாரிய குழிகள் மண்னில் தோன்றியுள்ளன. அதில் மழை நீர் தேங்கியுள்ளது.
இன்று நடந்த அகோர எறிகணைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் பல சிறுவர்களின் உடலங்கள் இங்கு நீரில் மிதப்பதாகவும், கை, கால் மற்றும் தலைபோன்ற உடல் அங்கங்கள் நிலத்தில் பரவிக் காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவம் நெருங்கி வந்துகொண்டிருப்பதாக ஒலிபரப்பிகளில் அறிவித்து மக்களின் மன நிலையையும் குழப்பும் நோக்கில் இலங்கை அரசு திட்டமிட்டு செயல்படுவதாக கூறப்படுகிறது. கண்ணுக்கு முன்னே ஒரு இனஅழிப்பு நடைபெறுகிறது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் சர்வதேசம்.
Comments