இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் உடன் ஆயதங்களை வழங்குவதை உடன் நிறுத்த வேண்டும் - யேர்மனியக் கட்சிகள்
![](http://www.pathivu.com/uploads/images/2009/germany_flag_out.jpg)
யேர்மனிய பாராளுமன்றில் இடம்பெற்ற சிறீலங்காவின் தற்போதைய நிலவரம் குறித்த விவாதத்தின் போதே இக்கட்சிகள் இக் கோரிக்கையை விடுத்துள்ளன.
சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரும் மனித உரிமை விதிமுறைகளை கவனத்திற்கொள்ள வேண்டும்.
மோதல் வலயத்தில் உள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் நாடுகளுடனும் மனித நேய உதவிகளை வழக்கும் தொண்டு நிறுவனங்களுடனும் சிறிலங்கா அரசாங்கம் இணைந்து செயற்பட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும்.
ஏதிலிகள் முகாங்கள் அனைத்துலக தராதரத்திற்கு அமைவாக உருவாக்கப்படுவதுடன் அவர்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
சிறீலங்கா அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் ஆயுத உதவிகளை வழங்கும் நாடுகள் உடனடியாக ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் என சந்தேகத்தில் கைது செய்யப்படுவோர் ஐனநாயக முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என இரு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
Comments