செல்வி. ஜெ. ஜெயலலிதாவிற்கு அமெரிக்காவில் உள்ள ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு ”தமிழ் பாதுகாவலர்”என்று கூறி ஆதரவு தெரிவித்துள்ளது

இலங்கை தீவுக்குள் தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயராம் ஜெயலலிதாவிற்கு அமெரிக்கா வாழ் ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு ”தமிழ் பாதுகாவலர்” என அழைத்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவருடைய நிலைப்பாட்டை ஆதரித்தும் தமிழகத்திலுள்ள மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்ககளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அடங்கிய கடிதம் ஒன்றை ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு அவருக்கு அனுப்பியுள்ளது.

எங்கள் தனித் தாய்நாட்டிற்கான உங்கள் ஆதரவிற்கு நன்றி

அன்புள்ள செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு,

ஈழத் தமிழர்களுக்காக தாய்நாடு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற உங்களின் துணிச்சலான நிலைப்பாட்டினால் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பில் (Tamils for Obama) இருக்கும் நாங்கள் பெருமகிழ்ச்சியும் ஊக்கமும் அடைந்துள்ளோம். அத்தகைய நோக்கத்திற்காகத்தான் தமிழர்கள் கடந்த 36 வருடங்களாக போரிட்டும் 61 வருடங்களாக மடிந்தும் கொண்டிருக்கின்றனர்.

”தமிழ் பாதுகாவலர்” “The Protector of the Tamils” என்ற பட்டத்தை, உங்களை யாரும் இதுவரையில் இவ்வாறு விளிக்கவில்லையெனில், உங்களுக்கு முதன்முதலாக சூட்டுகிறோம்.

நீங்கள் தமிழகத்தில் பேசும் பேச்சுகள் இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஈழத்தில் துன்புற்றுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் ஆறுதல் அளிப்பதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் உள்ளதுடன், உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் உள்ளது.

தமிழீழம் அமைய வேண்டும் என்ற உங்களின் துணிச்சலான ஆதரவை நாங்கள் பாராட்டி வரவேற்கிறோம், மேலும் தமிழக மக்கள் தங்களுடைய வாக்குகளை உங்களுக்கு அளித்து ஆதரித்திடுமாறு வேண்டி வலியுறுத்துகிறோம்.

நன்றி.
உங்கள் உண்மையுள்ள,
ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு
(Tamils for Obama)

இலங்கை தீவுக்குள் தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பேன் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயராம் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். அவருடைய அறிக்கை அமெரிக்கவாழ்த் தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா இலங்கை தீவிற்குள்ளேயே தமிழ் சொந்த நாடு உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆதரிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார். அவருடைய அறிக்கை அமெரிக்க வாழ்த் தமிழர்கள் அவரை ”தமிழ் பாதுகாவலர்”என்று அழைப்பது உட்பட உலகலாவிய பாராட்டுதலை பெற்றுள்ளது.

செல்வி ஜெயலலிதா முன்னதாக ஒருங்கிணைந்த இலங்கையை அதரிக்கும் நிலையிலிருந்து இலங்கை அரசு தமிழ் குடி மக்களுக்கு இழைக்கும் கொடுமைகளை பற்றிய தகவல் அறிக்கைகளையும் படக்காட்சிகளையும் பார்த்த பிறகு தன் நிலையை மாற்றிக்கொண்டார்.

முன்னாள் தமிழக முதல்வர் மேலும் இதேபோன்ற கிழக்கு வங்காள கொடுமையின் போது இந்திராகாந்தி இந்திய இராணுவத்தை பயன்படுத்தியதை நிறைவுகூர்ந்து இலங்கையிலும் இராணுவத்தலையீட்டை ஆதரிப்பதாக தெரிவித்தார். தென் இந்திய நகரான ஈரோட்டில் ஒரு பொதுக்கூட்டத்தில் இந்திராகாந்தி வங்காள தேசத்தை உருவாக்குவதில் வெற்றி அடையவில்லையா? என்று முழங்கினார்.

தமிழ் தனி நாடு விஷயத்தில் ஜெயலலிதாவின் நிலையை பாராட்டி ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு (Tamils for Obama) என்னும் தமிழ் அமெரிக்கர்களின் அரசியல் அமைப்பு ஒன்று செல்வி ஜெயலலிதாவிற்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் தங்களை இதுவரை யாரும் ”தமிழ் பாதுகாவலர்” “The Protector of the Tamils” என்ற பட்டத்தை, உங்களை யாரும் இதுவரையில் இவ்வாறு விளிக்கவில்லையெனில், உங்களுக்கு முதன்முதலாக சூட்டுகிறோம் என்ற வாசகமும் உள்ளடங்கியிருந்தது.

ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பின் (Tamils for Obama) ஒரு செய்தி தொடர்பாளர் செல்வி ஜெயலலிதாவின் தமிழீழ மக்களுக்கான வீரமான ஆதரவை பாராட்டுறார். இங்கு வட அமெரிக்காவில் உள்ள எங்களால் செய்ய இயலாத வாக்களிக்கும் ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் செய்வார்கள் என்று நம்புகிறோம் என்று கூறினார். சென்னை ஆன்லைன் என்னும் இந்திய அரசியல் சஞ்சிகை ஒன்று இது அவருடைய வட்டார அரசியல் காட்சிகளிலிருந்து தேசிய அளவிற்கு தன்னை மாற்றிக்கொள்வதற்கான முயற்சி என்று எழுதியது. எப்பொழுதும் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் உள்ள இலங்கை பிரச்சனை தற்பொழுது இந்தியாவில் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Tamils for Obama வின் கடித வாக்கியங்களை ஆங்கிலத்தில் படிப்பதற்கு இங்கே அழுத்தவும: http://www.tamilsforobama.com/Letters/English_jaya.html

Comments