இராணுவத்தின் இந்த திடீர் தாக்குதல் நிறுத்தம் குறித்து மக்கள் பீதியடைந்துள்ளனர். இது யுத்த நிறுத்தமோ அல்லது வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாகவோ ஏற்பட்டதல்ல. இலங்கை அரசானது பாரிய அளவில் இரசாயண குண்டுகளை பயன்படுத்தி (மூச்சுத் திணறல் குண்டுகளை) பின்னர் அப்பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்துடன் இருப்பதாக தவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று கிளிநொச்சிக்கு 200 நச்சுவாயு கவச அங்கிகள் மற்றும் முகமூடிகள் என்பன கொண்டுசெல்லப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இன்னும் பல முகமூடிகள் வந்தடைந்த பின்னர் இத்தாக்குதலைத் தொடங்க இராணுவம் காத்திருப்பதாக நம்பப்படுகிறது. இவ்வகையான மூச்சுத் திணறல் குண்டுகளை இலங்கை இராணுவம் முன்னரும் பயன்படுத்தியிருக்கிறது.
இவ்வகையான குண்டுகள் சுமார் 30 நிமிடங்களுக்கு மூச்சுத் தினறலை ஏற்படுத்தவல்லது, அத்துடன் வயோதிபர்களும் குழந்தைகளையும் இது பெரும்பாலும் கொண்றுவிடும். ஆகையால் இது சர்வதேசரீதியாக தடைசெய்யப்பட்ட குண்டுகள் ஆகும்.
எந்த நேரமானாலும் இக் குண்டுகள் தமது பகுதிகள் மீது வந்து வீழலாம் என எம் உறவுகள் நடுங்கியவண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் புலம்பெயர் வாழ் தமிழர்களே இதனைத் தடுத்து நிறுத்த சர்வதேச அழுத்தத்தை பிரயோகிக்க ஆவன செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறது.
Comments