"நாம் ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றோம். ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பொதுமக்களின் உயிரழப்புக்கள் அதிகரித்திருப்பதாக நாம் கருதுகின்றோம்" என இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜயன் கெலி ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
"ஆயுதங்களைக் கீழே வைக்குமாறும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறும் விடுதலைப் புலிகளை நாம் மீண்டும் மீண்டும் கேட்டு வந்திருக்கின்றோம். அதேவேளையில், தமது தாக்குல் நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாகவும், பொதுமக்களுக்கு அதிகளவு பாதிப்புக்களை ஏற்படுத்தும் கவனர ஆயுதங்களை இனிமேல் பாவிக்கப்போவதில்லை எனவும் சிறிலங்கா அரசாங்கம் ஏப்ரல் 27 ஆம் திகதி வெளியிட்ட அறிவித்தலின்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments