காயப்பட்ட மக்களை ஏற்றிச் செல்லும் பேருந்து மீதும் எரிகுண்டுத் தாக்குதல்

இன்று மதியம் முதல் முள்ளிவாய்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகள் மீது இராணுவத்தினர் கடும் எறிகணை மற்றும் விமானத்தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்லும் பேரூந்து மீதும் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் ஏவிய எரிகுண்டு எறிகணை இந்தப்பேரூந்துக்கு அருகில் வீழ்ந்து வெடித்ததால் அதில் ஏற்றப்பட்டிருந்த 3 பயணிகள் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்ததுடன், மீதம் உள்ள நோயாளர்கள் சிறு எரிகாயங்களுடன் தப்பியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேரூந்து ஓட்டுனரையும் காணவில்லை என பிறிதொருதகவல் தெரிவிக்கின்றது. இன்றைய அகோரத் தாக்குதலில் இறந்த மக்களின் எண்ணிக்கை சரிவர தெரியவில்லை எனவும், தற்காலிக வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சற்று முன்னர் முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Comments