கனடாவில் ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தின் முன்பாக (02-05-2009) ஞாயிற்றிக்கிழமையன்று மதியம் 12.00 மணிக்கு மாதகல் குணம் என அழைக்கப்படும் வீரகத்திப்பிள்ளை குணபாலசுந்தரம் அவாகள் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்
இவர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கின்றார்;
சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்ளும் முகமாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்
உணவு, மருந்து மற்றும் அவசிய பொருட்களை வான்வழியாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
சிறீலங்கா அரசுக்கு எதிராக இராஜரீக-பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கனடிய அரசு அங்கீகரிப்பதன் ஊடாக நிரந்தர சமாதானத் தீர்வை ஏற்படுத்த வேண்டும.;
நீண்டகாலமாக தமிழ்த்தேசியத்துக்காக பணியாற்றிய குணம் அவர்கள் திலீபனின் வழியில் தான் திடமாகவும் உறுதியாகவும்
உண்ணா நோன்பைத் தொடர்வேன் எனத்தெரிவித்துள்ளார்.
Comments