உயிர் உள்ளவரை விடுதலைப்புலிகளுக்கு குரல் கொடுப்பேன் அண்ணன் வைகோ

இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார்.இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன், காவல் துறையினரின் முழு பாதுகாப்புடனேயே பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமற்றவர் எனவும் மகேந்திரன் கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், பாமக மாநில கொள்கை விளக்க அணித் தலைவர் வியனரசு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னை உயர் நீதிமன்ற சட்டத்தரணி கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வைகோ பேசும்போது, ‘’ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியா தோற்கடித்துள்ளது. இந்த நேரத்திலேயே கருணாநிதியின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக தமிழர்களுக்கு எதிராக சோனியா காந்தி இந்திய மத்திய அரசு மூலம் செய்த துரோகத்தை தடுக்க கருணாநிதி தவறியுள்ளதாகவும்’’ வைகோ குற்றம்சுமத்தினார்.

அவர் மேலும், ‘’என் உயிர் உள்ளவரை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்’’ என்று தெரிவித்தார்.

Comments