அமெரிக்க வெள்ளை மாளிகை முன்றலில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி: அமெரிக்க, கனடிய தமிழர்களுக்கு அழைப்பு
வார இறுதியில் சிறிலங்கா அரசு மேற்கொண்ட தமிழ் இனப் படுகொலையில் 3 ஆயிரம் உயிர்களைப் பலி எடுத்ததைக் கண்டித்தும், ஒபாமா அரசை R2P - Responsibility to Protect என்ற 'பாதுகாக்கும் தார்மீகக் கடமை' கோட்பாட்டின் அடிப்படையில் உடனடியாக மனிதாபிமானத் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை நடைபெறும் பேரணியில் அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பேரணி வெள்ளை மாளிகை முன்பாக பென்சில்வேனியா அவென்யூ அருகில் உள்ள Lafayette Square சதுக்கத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தல் கண்டதும் உங்கள் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தாமதமாகவேனும் வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியிருக்கின்றனர்.
காலத்தின் தேவை கருதி குறுகிய அவகாசத்துடன் ஏற்படுத்தும் இந்நிகழ்வில் பங்குகொண்டு உங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
Comments