பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்கள் தொடர்ந்தும் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்: விடுதலைப் புலிகள்

பிரிட்டிஷ் பிரெஞ்சு அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்ப் பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரிட்டிஷ், பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்கள் உதவி புரிய வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
யுத்த சூனிய வலயத்தில் உள்ள பொதுமக்களது நிலைமைகள் குறித்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் மதிப்பீடு நடத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள விடுதலைப் புலிகள்
போர் நிறுத்தம் ஒன்றின் மூலம் மட்டுமே அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவை தொடர்பாக பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் யுத்தம் இடம்பெற்றுவரும் பிரதேசத்தில் உள்ள மக்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்து அவதிப்படுவதாக தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், பொதுமக்கள் பிரச்சினைகளை கண்காணிப்பதற்கு ஓர் சர்வதேச பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments