எம் உறவுகளே தேசிய தலைவர் பற்றி பல செய்திகள் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களில் வெளிவருகின்றன.
இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிர்வு இனையம் வேண்டி நிற்கிறது. மக்களைக் குழப்பும் நோக்கில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிர்வு இனையம் வேண்டி நிற்கிறது. மக்களைக் குழப்பும் நோக்கில் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
புலம் பெயர் வாழ் எமது உறவுகளே நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடையம் ஒன்று உள்ளது. நாம் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இது மக்கள் சக்தியாக உருமாறி சர்வதேசத்தின் கதவுகளை தட்டி மெல்லத் திறந்துள்ளோம். அமெரிக்கா, பிரித்தானியா பேன்ற நாடுகள் எமது தொடர்போராட்டம் காரணமாக தற்போது எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்கின்றன.
இன் நிலையில் இந்தப் போராட்டங்களை நிலை குலைக்க சில சக்திகள் முணைகின்றன. எமது விடுதலைப் புலிகளின் தலைமை குறித்த நேரத்தில் தகுந்த முடிவை எடுக்கும். அந்த முடிவு இலங்கையில் இருந்து வெளிவரும் என்பதில் ஜயமில்லை. அதுவரை நாம் பொறுமைகாப்போம். மக்கள் சக்தியாக ஒன்றுபட்டு எமது போராட்டங்களை வழமைபோல கொண்டுசெல்வோம்.
Comments