மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!!

இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன?

அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான்

நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம்

யுத்தம் முடிந்த உடனேயே
தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது
தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது

ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை
தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது

Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது
அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது

அதில் தாடி முளைத்துவிட்டது

காலையில் clean ஆக இருந்த முகம் 6 மணித்தியாலத்தில் சவரம் செய்யாதது போலாகி விட்டது

நீங்கள் சவரம் செய்தால் இப்படி மீண்டும் முளைக்க எத்தனை நாளாகும்??
காலையில் நிங்கள் smart ஆக alayze செய்து விட்டீர்கள்
இந்தமுறை வீடியோ இல்லை

சிந்தியுங்கள் மக்களே... எல்லா தளபதிகளிட்கும் ஒரே ஒரு படம் ஒரே ஒரு வீடியோ

அனால் தலைவனிட்கு மட்டும் பல version photo and video
இதில் எது தலைவரின் உடல்???

சரி பின்பு சரியான உடலினை எடுத்து இருந்தால் வீடியோ இணை வெளியிடுங்கள்

இல்லை சரியான உடலினை கண்டு பிடியுங்கள்

சிறிய ஒரு நிலபரப்பில் ஒரு உடலினை கண்டு பிடிக்க முடியாத இராணுவமா?
அவர்களிட்க்கு பிரபாகரன் தப்பித்து விட்டார் என்று 100% தெரிந்து தான் இப்படி யாரினதும் உடலுக்கு முகம் பொருத்துகிறான்

எமது தலைவனை பிடிக்க முடியாது என்று அவனிக்கு தெரிகிறது
ஆனால் எமக்கு நம்ப முடியவில்லை

அது எம் தலைவனாக இருக்குமோ??

எமக்காக பல தளபதிகளும் போராளிகளும் சேர்ந்து தலைவனையும் அவரிட்கான பாதுகாப்பு உருபினர்களைய்ம் உரிய இடத்திட்கு அனுப்பி வைத்து விட்டு மாவீரர் ஆகிவிட்டார்கள்

நாங்கள் அவசரப்பட்டு எமது தலைவரை வெளியில் கொண்டுவந்து உண்மையிலேயே பலி கொடுக்க கூடாது

அது சரி Srilanka அரசுக்கு ஏன் இந்த பித்தலாட்டம்? ஏன் இந்த தேவை? காரணம் பல....

இந்திய இலங்கை கூட்டு சதியால் கடந்த 9 மாதங்களில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள்

இறுதியாக பல அரசியல் போராளிகளும் காயப்பட்ட போராளிகளினதும் மக்களினதும் கொலை

இன்றும் வவுனியாவில் நடந்துகொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்பு
தனது படுகொலை வெளியில் வந்தால் இனப்படுகொலை என்று ஆகிவிடும்

பின்னணி வேலை செய்த இந்தியாவின் மானம் போகும்
சர்வதேசம் விழித்துக்கொள்ளும்
ஐநா வந்து நாட்டினை பிரித்து கொடுத்து விடுவார்கள்

நேரில் கண்ட சாட்சியங்களை மாற்ற அல்லது இல்லாமல் செய்ய சில நாட்கள் ஏன் மாதங்கள் கூட செல்லலாம்

எனவே கொல்லப்பட்ட உடலங்களை மறைக்க நேரம் தேவை
படுகொலையினை சர்வதேசம் கண்டு கொண்டாலும்
அந்த படுகொலையினை நியாயப்படுத்த ஒரு காரணம் தேவை

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

இப்போதைக்கு சர்வதேச கேள்விகளை குறைப்போம்
அதை நிறுத்த ஒரே வழி
உங்கள் போராட்டங்களை சில நாட்களிட்கு நிறுத்துவது

சர்வதேசம் இதை கேள்வி கேட்க உங்கள் காரணம்-> புலம் பெயர்ந்த மக்களின் போராட்டங்கள்

அந்த போராட்டங்களை நிறுத்த ஒரே வழி உங்களிட்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்
இது எங்களை எந்த நடவடிக்கையும் செய்யாமல் தடுத்து வைத்து உள்ளது

முதலாவது முறை தோற்றது plastic surgery Pirapakaran

இதனால் மீண்டும் கனகச்சிதமாக ஒரு உடலை செய்து படம் எடுத்து ஒப்பேற்றி விட்டார்கள்

அதை நாங்கள் நம்பி-அவன் வென்றால் நாம் இடிந்து போய் இருக்க சர்வதேசம் வாய் மூடி இருக்க
எமது இனமே அங்கு அளிக்கப்படும்
சகல தடயங்களும் அளிக்கப்பட்டு விடும்

இடிந்து போய் இருக்கவா அவர்கள் தம் இனிய உயிரை ஈர்ந்தார்கள்??

எந்த இழப்பும் எம் உறுதியை அசைக்க கூடாது
கவலையிலும் கோவத்திலும் முடிவுகள் எடுக்காமல் நின்று நிதானிப்போம்.. சிந்திப்போம்..

இன்று நடந்தது என்ன? எங்கே பிழை விட்டோம்? யார் பிழை விட்டது?
2001 இல் தலைவர் எமது தாயகத்தின் கணிசமான இடங்களை பிடித்து சம பலத்துடன் சமாதானம் செய்தார்

ஏன் சிங்களத்தினை வென்று சமாதனம் சென்றார் என்றே சொல்லலாம்
போராட்டத்தினை சர்வதேசத்தின் கையில் கொடுத்தார்
இதில் புலம் பெயந்தவர்களிடான பங்கினையும் சொல்லி மேட்கொண்டு அரசியல் வெற்றியினை எடுக்கும் பொறுப்பினை எங்களிடம் தந்தார்
நாங்கள் என்ன செய்தோம்?

சமாதான காலத்தில் ஊருக்கு போனோம் எமது பணத்தினை செலவளித்தோம்
போய்வாற டிக்கெட், சாப்பாடு, அங்குள்ளவர்களுக்கு செலவு - தலைக்கு ஆயிரம் டாலர்

தம்பிக்கு motor bike, தங்கைக்கு உடுப்புகள், அம்மாவிக்கு சங்கிலி
சிங்களவனிக்கு அவ்வளவும் அந்நிய செலாவணி
அவனின் பொருளாதாரத்தினை வளர்த்தோம்
தமிழரின் பலத்தினை கை விட்டோம்.. இப்பதானே சமாதனம் என்னத்துக்கு இவைக்கு காசு?

அவங்கள் தானே அநியாய tax அடிக்கனம்... ஏன் எங்கட காசு??

உவங்கள் தாங்கள் வீடு கட்டவும் வாகனம் ஓடவும் நாங்கள் காசு குடுக்கவோ?

சுயநலத்துக்கு இப்படி விளக்கம் வேறை ..
உங்களிட்கே தெரியும் நிங்கள் என்ன செய்தீர்கள் என்று
அங்க போனால் காசு கேப்பாங்கள் நிங்கள் நேராக யாழ்பாணம் விமானத்தில போனீர்கள்

சிலர் ஒரு படி மேல போய் அநாதை பிள்ளைகளை பொறுப்பு எடுத்தீர்கள்
அவர்களிற்கு நல்ல உடுப்பு வாங்கி அனுப்பினீர்கள் புரியாணி சாப்பிடார்கள்
இன்றோ 200,000 ஆயிரம் அனாதைகள் அபலைகள் விதவைகள்
எம்மிடம் காசிருந்தும் அவர்கள் பட்டினியால் சாகிறார்கள்

தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்ட இன-அழிப்புப் படையெடுப்பில் 40,000 க்கு மேற்பட்ட‌ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 60,000க்கு மேற்பட்ட‌ தமிழர்கள் படுகாயமடைந்து உடல் ஊனமாக்கப்பட்டுவிட்டனர். 200,000 மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறியுள்ள‌து.

ICRC கூட விரட்டப்பட்டு விட்டது
UNHCR கேட்டும் அனுமதி இல்லை
இப்போ என்ன செய்ய போகிறீர்கள்? wait....

ஒரு சில மாதத்தில் ஒரு சிறு அமைதி வரும்
ஓடிச்சென்று மீதம் இருக்கும் மக்களை ஓடி ஓடி கவனிப்போம்
மீண்டும் கை விடுவோம்.. அவர்கள் அளிக்கபடுவார்கள்
சில மாதத்தில் ஒரு சிறு அமைதி வரும் - ஓடிச்சென்று மீதம் இருக்கும் மக்களை கவனிப்போம்

மீண்டும் கை விடுவோம்.. அவர்கள் அளிக்கபடுவார்கள்
எத்தனை தடவை இப்படி செய்வோம்? எம்மவர்களை நாமே அளிப்போம்?

இது யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது காயபடுத்தவோ இல்லை
நாம் அனைவரும் எமது பிழைகளை உணர வேண்டும்
சரி இனி என்ன செய்யலாம் என்று யோசிப்போம்?

இன்று சர்வதேசம் எமக்கு சாதகமாக மாறுவது போல் ஒரு மாயினை தந்து எமது தளபதிகளை கொன்று விட்டது

இதில் எமது தலைவனும் பிழை விட்டது ஒரு கசப்பான உண்மை தான்
இதில் தலைவன் பிழை விட்டது சமாதானத்தினை நம்பியதா? சர்வதேச நாடுகளை நம்பியதா??

இல்லை...
புலம் பெயர்ந்த எம் மக்களை நம்பியது தான்.. இது தான் கசப்பான உண்மை
தலைவன் எங்களை நம்பினார்

நாங்களோ நாங்கள் புலம் பெயர்ந்த நாடு அரசுகளை நம்பினோமே தவிர தமிழர் பலத்தினை பலப்படுத்த தவறி விட்டோம்

அரசியலிலும் சரி பொருளாதாரத்திலும் சரி தமிழரின் பலத்தினை வளர்க்காது விட்டோம்

2001 இல் இராணுவ பலத்தில் சமமாக இருந்தோம் அரசியலில் பலம் இழந்து இருந்தோம்

இராணுவ பலத்தினை பலமாக வைத்து இருந்து கொண்டு எமது அரசியல் போராட்டத்தினை வளர்த்து இருக்க வேண்டும்
அனால் நாம் எதைனையும் சரிவர செய்யவில்லை
அதாவது செய்தோம் ...

ஏனோ தானோ என்று செய்தோம்
நம்பிகையுடன் முழு மூச்சாக செய்யவில்லை
ஆனால் ஒரே ஒரு மாற்றம் நிகழ்ந்து விட்டது
எமது போராட்டம் சர்வதேசமயபடுத்தபட்டது
சர்வதேசம் சொன்ன காரணம் நீங்கள் பயங்கரவாதிகள் !!

ஆயுதங்க்களை கை விடுங்கள்!! சமாதானமாக போங்கள்!!

இன்று நாம் விரும்பியோ விரும்பாமலோ ஆயுதம் ஓய்வுபடுத்தப்பட்டது
புலிகளும் தலைவர்களும் இல்லாது தமிழர்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிட்கிறோம்

நீதி கிடைக்குமா??

நிச்சயம் கிடைக்கும்
ஆனால் அளுவதாலோ கேஞ்சுவதலோ தரப்போவது இல்லை
9/11 இல் பயங்கரவாதத்திட்கு பயந்த சர்வதேசம் இற்கு 2008 பிறகு பொருளாதார வீழ்ச்சியால் ஆடிப்போய் நிட்கிறது

சர்வதேசங்களிக்டு இன்று தேள்வை பணம்!!

பணம் பணம் பணம் மட்டுமே!!

மனிதாபிமானம் இரண்டாம் பட்சம்!!

உடனடியாக செய்யப்பட வேண்டியது:
தமிழர்க்கு என்று ஒரு அரசியல்-தொண்டு கட்சி
இதில் அனைத்து தமிழர்களும் அங்கத்தவர் ஆக வேண்டும்
கட்சி நிர்வாகிகள் முறைப்படி அங்கத்துவ வாக்களிப்பினூடு தெரிவு செய்யப்பட வேண்டும்

இந்த அரசியல் கட்சிகள் அந்நாட்டு சட்ட திட்டங்களிட்கு உட்பட்டு அந்நாட்டு காவல்துறை உதவிஉடன் கொண்டு செல்லப்பட வேண்டும்
இந்த கட்சி உறுபினர்களை அந்த நாட்டு அரசு அலட்சியம் செய்யாது
இன்றுவரை சொன்ன காரணம் நீங்கள் "அவர்களால்" நிர்ணஜிக்கப்பட்ட ஆக்கள்
இன்று வருகிறோம் இந்த நாட்டின் தமிழ் குடிமக்களால் தெரிவு செய்யப்பட ஆட்கள்

எம்மிடம் கதையுங்கள் எமது நியாயத்தினை கேளுங்கள்
எல்லா கட்சி உடனும் வேலை செய்யுங்கள் எல்லா கட்சிக்கும் பண உதவி செய்யுங்கள்

எல்லா உடகங்களிட்கும் தொடர்பு செய்து கதையுங்கள்
இதில் சேரும் நிதியினை கொண்டு அந்த நாட்டில் சகல அரசியல் மட்டங்க்களிலும் எமது பிரச்சினையை தெளிவு படுத்த வேண்டும்
முக்கியமாக காவல்துறை, உளவுத்துறை உறுபினர்கட்கு எமது பிரச்சினையை தெளிவு படுத்த வேண்டும்

எமக்குள்ள அனுதாபத்தினை எமது பலமாக மாற்ற வேண்டும்
அதுக்கான செலவினை புலம் பெயர் நாம் செய்வோம்
வருடம் 1000௦ டாலர் அதட்கு ஒவொருவரும் கொடுப்போம்
இதனை சட்டபூர்வமாக்கி "Charity Status" பெறுங்கள்
இதட்கான கணக்கு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும்
தாய் நாட்டின் அபிவிருத்தயும் அப்படியே
அமைப்பு தேவைகளை TRO பட்டியலிடும் அதுவே தாய் அமைப்பு
உதவிகள் அதனுடாக மையப்படுத்தப்பட்டு அனுப்பப்படும்
இதனால் தேள்வை அற்ற செலவுகள் பிழைகள் இல்லாது ஒழிக்கப்படும்

தமிழர்க்கு என்று ஒரு நிதி நிறுவனம் Bank of Tamil Eelam
இதில் உங்கள் சேமிப்பை வளருங்கள்

உங்கள் ஒவ்வொரு நிமிடத்தினையும் உங்கள் நிதி பலம் உயர்த்த உழையுங்கள்
தமிழர் பலமே தமிழீழம் எடுத்து தரும்

இனி ஒரு தமிழ் உயிர் அன்னியனால் சாகக்கூடாது என்றால் தமிழர் படை பலம் மலையாக வேண்டும்

ஒவ்வொரு நாட்டிலும் இது நடந்து முடிந்தால் சில வருடத்தில் எமக்கான நாடு உருவாகும்

வேறு என்ன செய்யலாம்?
இங்கிருக்கும் ஒவ்வொரு குடும்பங்களும் நாட்டில் ஒவ்வொரு குழந்தைகளை உங்கள் குடும்ப உறவாக "Sponcer" செய்யுங்கள்

மணம் முடிக்காத அனைவரும் தாய் நாடு சென்று
அங்குள்ள ஆண் பெண்களை திருமணம் செய்ய முன்வாருங்கள்

விசேடமாக இந்த போரில் வாழ்கை துணையை இழந்து தவிப்போருடன் உங்கள் இனிய வாழ்வை தொடங்குங்கள்

உங்கள் தனிப்பட்ட திறமைகளை விருத்தி செய்யுங்கள்

பொருளாதாரத்தில் மலையாக வளருங்கள்

தேள்வை இல்லாத ஆடம்பரங்களை குறையுங்கள்

சாமத்திய வீடு, பிறந்தநாள் கொண்டாடங்களை நிறுத்துங்கள்

தமிழீழம் வரும் வரை உங்கள் குழந்தைகளின் பிறந்தநாளை உங்கள் வீடுகளில் எளிமையாக கொண்டாடுங்கள்

அதில் மிச்சம் வரும் பணத்தினை மாவீரகளின் கனவினை நனவாக்க கொடுங்கள்
ஒன்றை மட்டும் நினைவில் வைத்து இருங்கள்

ஒவ்வொரு மாவீரனும் உங்களிட்காகவே தம் இனிய உயிரை ஈர்ந்தார்கள்

அவர்கள் உங்கள் தோள்களில் நிறையவே தந்துவிட்டு மாவீரர் ஆனார்கள்

அவர்களும் நினைத்து இருந்தால் வெளிநாடு வந்து சாதாரண சுக போக வாழ்கை வாழ்ந்து இருக்க முடியம்

அவர்களிட்கான உண்மையான வணக்கம் அவர்களின் இலட்சியத்தினை அடைய வேண்டும்

இப்படி செய்வதால் மட்டுமே எமது தலைவனை மீண்டும் உலகதிட்கு கொண்டு வரலாம்

1989 இல் இந்திய படைகளால் கொல்லப்பட்டார் எமது தலைவன்

1991 இல் தனது கடும் உழைப்பாலும் எமது ஆதரவாலும் மீண்டும் உயிர்த்து வந்தார்

அதே போல் இன்று கொல்லப்பட்ட தலைவர் கொல்லப்பட்டதாகவே இருக்கட்டும்

நாம் வளர்ந்து உலகம் எமது உண்மையான போராட்டத்தினை புரிந்து அங்கிகரிகட்டும்

அன்று எம் தலைவன் மீண்டும் உயிர்ப்பார்

சரியான நேரத்தில் எம் தலைவன் சரியான முடிவு எடுப்பான்
நம்பிக்கை துரோகங்கள் எம் தலைவனுக்கு புதியவை அல்ல

துரோகங்கள் பல வடிவில் வந்தது
பலமுறை நண்பனாக வந்தார்கள்... ஏமாந்தோம் .. ஆனால் வென்றோம்
பின்பு அயல் நாடக வந்தார்கள்...ஏமாந்தோம் .. ஆனால் வென்றோம்
இன்று சர்வதேசமாக வந்தார்கள்...ஏமாந்தோம் .. ஆனால் இடிந்து போய் இருக்கிறோம்

இடிந்து போய் இருக்கவா மாவீரர்கள் தம் இனிய உயிரை ஈர்ந்தார்கள்??
இதனை எம் தலைவன் என்றும் விரும்ப மாண்டார்

எந்த இழப்பும் எம் உறுதியை அசைக்க கூடாது

இதற்காகவா 26000 மாவீர்களும் தம் இனிய உயிரை ஈர்ந்தார்கள்??

சாவிலும் வாழும் Phenix பறவைகள் போல் அவர்கள் மீண்டும் வருவார்கள்
மாவீரர் சாவதில்லை எம்முடன் வாழ்கிறார்கள் என்று தமிழர்கள் அனைவரும் உறுதி எடுப்போம்

ஒவொரு தமிழனும் புலிதான் என்று சிங்களம் சர்வதேசத்திக்கு உறுதிபடக்கூறிவிட்டது

இன்று கனடாவில் 350,000 ஆயிரம் புலிகள்

லண்டனில் 250,000 ஆயிரம் புலிகள்

ஒவ்வொரு நாட்டிலும் புலிகள்

எல்லா நாடுகளிலும் எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....

தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதிகளின் புதைகுழியின் மேலே கைகளை வைத்துச் ச‌ப‌த‌ம் எடுப்போம்.

"த‌மிழீழ‌ம் காணும்வ‌ரை நாங்க‌ள் ஓயப் போவ‌தில்லை"
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

Comments