ஊடகப்போரும் உலக ஊதுகுழல்களும்



இப்பொழுது உலத்திதிலுள்ள ஊடகங்களில் முதன்மைச் செய்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்காப் படையினாரால் கொல்லப்பட்டார் என்பதும் அச்செய்தி பற்றிய சாதக பாதக ஆராய்ச்சி ஆய்வுகளுமே..

இது பற்றி அந்த ஊடகங்கள் செய்தி வெளியிடும் போதும் சிறிலங்காப் படையினர் தெரிவிப்பதாகவே குறிப்பிடுன்றன. இது உண்மையில் தமிழின விரோதிகளும், சிறிலங்கா அரசும் அதன் இராணுவ இயந்திரங்களும், அத்தோடு கூடி சர்வதேச சதிகளும் சேர்ந்து ஈழத்தமிழரையும் உலகத்தமிழரையும் உலுப்பிவிட பரப்பட்ட திட்டமிடப்பட்ட சதிகார வேலையே தவிர வேறொன்றுமில்லை.

சிறிலங்கா அரசும் அதோடு சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களும் தமிழருக்கெதிரான போரில் வெற்றி பெற்றதென்பது உண்மையோ என்னவோ, ஊடகப் போரிலும் பிரச்சாரத்திலும் வெற்றிபெற்றுவிட்டது. எண்ணற்ற பொருத்தமில்லாத பொய்களை அள்ளி விட்டு, அவையனைத்தும் தமிழ் மக்களையும் அவர்கள் தமிழீழப் போரில் கொண்ட நம்பிக்கையில் சலிப்படைய வைக்கவே இந்த திட்டமிட்ட வன்முறையான வதந்திகளை வெளியிட்டு வருகின்றது. உண்மையில் இதை அனைவரும் புரிந்துகொல்வதர்க்குச் சற்றுக் காலம் தாமதிக்கலாம். ஆனால் அவையனைத்தும் எல்லாத்தரப்பினருக்கும் வெளிச்சத்திற்கு வரும் காலம் வெகுதூரமில்லை.

இப்படிப்பட்ட வன்முறையான செய்திகள் எவ்வாறு, எந்தச் சந்தர்ப்பத்தில், எத்தரப்பினரால் வெளிவருவதென்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டும். முதலில் இந்தச் செய்தியை நேற்றுமுன்தினம் வெளியானது. அதாவது எத்தரப்பினரின் ஆதரவோடும் அனுசரணையோடும் அதைப் பிரசுரிக்கிரார்கலேன்று அடிப்படையினை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். தமிழ்விரோதக் குழுக்கள் தம் சுய இலாபத்திற்காக தங்கள் நீண்ட சிந்தனையை, மழிக்காத மந்தபுத்தியைக் கூராக்கி குதர்க்கமான குசும்புகளை எல்லாம் குற்றமற்ற குறுஞ்செய்திகளையும், குறிப்புணர்ந்துதெழுதும் கட்டுரைகளையும் கடுகதியியே வெளியிடும் வீரியமுண்டு இந்த கனவான்களுக்கு.

ஆரம்பத்திலே கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை பற்றியும், அவரின் மகன் பற்றியும் மிகச் சூசகமாகவொரு செய்தியினைக் கிழப்பியிருந்தனர். சிலகாலம் சிலரால் அச்செய்தியும் காவப்பட்டுச் சின்னாபின்னமாகியபின் சீரழிந்து போனது. பின்னர் கொஞ்சக்காலத்தில் புலானாய்வுப் பொறுப்பாளர் பற்றி புதியதொரு கதையை கட்டவிழ்த்தனர். அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு அங்கிருந்தோரே காரணமாமென்று அலட்டிக்கொன்டனர், அதற்குப் பின்னும் அதையொட்டி அருவெருக்கத்தக்க வகையில் அதிகமாய் வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருந்தனர். இடைவெளியொன்றை விட்டு விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் பற்றியும் இழிவாய் பலவதந்திகளை எடுத்துவிட்டனர். ஆனால் அவர் இன்றுவரை உயிரோடிருந்து தமிழீழத்துப் போர்க்களத்தில் நின்றுகொண்டிருக்கிறார். அன்றொருநாள் அவுஸ்ரேலிய தமிழ் வானொலிக்கு தொலைபேசி மூலமாக நேர்காணலளித்து புலிகளின் நேர்மையினையும் நேசத்தலைவரின் நேரிய வழிகாட்டலையும், அவரின் ஆழுமை மிகுந்த நெறிப்படுத்தலையும் உலகறியபபடுத்தினார்.

சிறிலங்கா அரசும், அதன் இயந்திரங்களான அரச அச்சு, இலத்திரனியல் ஊடகங்களும் நீண்ட காலமாகவே எங்கள் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தைக் கொச்சைபடுத்திவந்தன. அத்தோடு போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் தமிழீழத் தேசியத் தலைவரைப் பற்றியும் அவர் குடும்பத்தினரைப் பற்றியும் எண்ணற்ற பொய்ப் பிரச்சாரங்களை அவ்வப்போது அள்ளிவிட்டுக்கொண்டே வந்தனர் இந்த அறிவுடை அதியுத்தம அரசாங்கத்தினரும் அவர்தம் கைக்கூலிகளும். தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் வெளிநாட்டில் வாழ்கிறார்களென்று முதலில் வதந்திகள் வந்தன. தலைவர் தன் பிள்ளைகளைப் பாதுகாப்பாகவும் சொகுஷாகவும் வெளிநாடுகளில் வசிக்கவைத்துவிட்டு மற்ரையவர்களைப் போரிற்குப் பயன்படுத்துகிறார் என்றும் படுபாதகமாக பிரச்சாரம் செய்தனர்.

பின்னர் கொஞ்சக் காலங்கடந்த பின்னர் தேசிய தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியும் களத்திலே நின்று போராடி வருகிறார் என்றும் தகவல்கள் கசிந்தன. போர் உக்கிரமடைந்து கிளிநொச்சியைப் படையினர் ஆக்கிரமித்த போது கண்டெடுத்ததாக சில புகைப்படங்களையும் தங்கள் இணையத்தளங்களில் வெளியிட்டனர் படையினர். அத்தோடு மகள் துவாரகாவின் புகைப்படமென்று சிலவற்றையும் இணையத்தில் காண்பித்தனர். உண்மையில் அன்றைய நாட்களில் துவாரகாவின் படமென வெளியிட்ட புகைப்படத்திற்கும் இன்று ஊடகங்கள் காண்பிக்கும் உண்மையான புகைப்படத்திற்கும் நூறுசதவீதம் முரண்பாடுகளுண்டு என்பதைப் படத்தைப் பார்த்தவர்களால் உணரமுடியும். சிலநாட்கள் கடந்ததும் இன்னும் பெரிய பொய்களை அள்ளிவிட்டது அரசு ஊடகம். கணனியில் புதிய தொழிநுட்பத்தினைப் பயன்படுத்தி புகைப்படங்களை தங்கள் எண்ணங்களுக்கேற்ற வகையில் வடிவமைத்து வெளியிட்டு மகிழ்ந்தனர் அரச தரப்பினர்.

தமிழர் தலைமையை தங்களின் உயிரையும் விட மேலாக நினைத்து மதிப்பளித்துப் போற்றும் தமிழ்ச் சமூகத்தினரிடமிருந்து தலைமையைப் பிரித்து விடுவதே இந்தக் குள்ளர்களின் குறுகிய நோக்கம். ஆயினுமிது அவர்கள் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதல்ல என்பது நம்மெல்லோருக்கும் தெரிந்தும் அவ்வப்போது நம்மில் சிலர் நமச்சலடைகின்றனர். போராட்டமென்பது வெறுமனவே ஆயுதத்தாலும் அதைத்தாங்கிய போராளிகளிகளாலும் மட்டும் வென்றுவிட முடியாதென்பது நாமெல்லோரும் அறிந்திருந்தும் நம்மில் சிலர் நகைப்பிற்கிடமான வகையில் நடந்து கொள்கிறார்கள் என்பதே எம்மைப் போன்றோரின் ஏக்கம். இதற்க்குப் பக்கபலமாகவும் சிலவேளைகளில் பங்காளியாகவும் செயற்பட்டு வருவது உலகத்திலுள்ள சர்வதேச ஊடகங்கள் என்பதுதான் எங்களுக்கு கவலையையும் வேதனையையும் தருகின்றது.

தமிழகத்தில் பெரும்பான்மையான அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை அங்கேயும் தொடர்ந்து வருகின்றது. உண்மை செய்திகள் வெளிஇட்டால் தங்கள் சுய இலாபத்திற்குப் பங்கமேற்பட்டுவிடுமென்ற குருகிய குருட்டுச் சிந்தனையால் அவர்கள் அவையனைத்தையும் தவிர்த்து வருகின்றனர். அத்தோடு சில சுயாதீனமான பிற ஊடகங்களையும் தங்களின் அதிகாரத்தினால் அடக்கி வருகின்றனர். அவர்களும் வர்த்தக விளம்பரங்களைக் கருத்தில் கொண்டு விவஷ்தைப்படுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்த வரையில் சதவீதமானவர்கள் கேபிள் கனெக்சன் எனப்படுகின்ற கம்பிவலைப் பின்னலூடாகவே தொலைக்காட்சியினைத் தரிசிக்கிறார்கள். அதிலும் அரச தலையீடுண்டு என்பதலினால் எந்தத் தொலைக்காட்சிழலும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலையுண்டு. ஆதலினால் அவனின்றி (கலைஞர்) அலைவரிசைகளும் அசைவதில்லை என்பது முற்றிலும் உண்மையானதுதான். இன்றைய நாட்களில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், அதாவது ஈழத்தமிழரின் அவலங்களை வெளிக்குணர்ந்த மக்கள் தொலைக்காட்சி சிலநாட்களுக்கு முன் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டும், ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டதும் தான். இன்றைய செய்திகளில் அதனை ஒளிபரப்பும் கம்பிவலை நிறுவனம் மக்கள் தொலைக்காட்சி அலைவரிசையை தங்கள் அலைவரிசையிலிருந்து நிறுத்திவிட்டது.

ஒருமாதத்திற்கு முன் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தயாரித்து வெளியிடப்பட்ட ஒரு காணொளியை பல உலக இலத்திரனியல் ஊடகங்களும் ஒளிபரப்பின. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிப்பதற்க்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்டது. இது உண்மையானதென்றும் அதை தாங்கள் உலங்கு வானூர்தியிலிருந்து பதிவு செய்ததாகவும் படைத்துறைப் பரப்புரை செய்தது. அந்தத் திருப்படத்தினை நானும் தரிசித்திருக்கிறேன். அதில் இரண்டு ஆயுததாரிகள் கூட்டமாக நிற்கும் பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள். அதாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்ல முயற்சிக்கும் புதுமக்களை விடுதலைப் புலிகள் தடுத்தி நிறுத்துவதையும், அதனையும் மீறி செல்லும் மக்களை நோக்கிப் துப்பாக்கிப்பிரயோகம் செய்கின்றனர் என்றும் அந்தக் கானொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் இரண்டு மூன்று ஆயுததாரிகள் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் போதும் மக்கள் ஓடாது, அசைவற்று, அவ்விடத்திலேயே நிக்கிறார்கள். எந்தவொரு வீரரும் தம்மை நோக்கிச் சுடுகலன்களால் சுடும் பொது தற்காப்புக்காகவேனும், ஒதுங்காமல் அப்படியே சிலையாக நிற்க மாட்டார்கள். ஆக இதிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்பவர்கள் யார், அந்த மக்கள் ஏன் ஓடாமல் நிற்கிறார்கள், என்பன வெளிப்படையாகவே தெரிகிறது. இவையெல்லாம் சர்வதேசத்திற்கு புரியாததா? அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறதா? என்பது நம் எல்லோர் மனதிலும் எழுகின்ற ஓர் எழிமையான கேள்வி. இதனை அரச ஊடகங்களும் அவர்களுக்க மிண்டுகொடுக்கும் மிதவாதா மித்துருக்களும் அடிக்கடி காண்பித்தனர்.

ஆயினுமிதை எவருமே தங்கள் சிரத்தினால் சிறிதளவேனும் சிந்திப்பதில்லை. எதற்கு சில காரங்கள் இருக்கலாம். சிலவேளைகளில் நாம் சிங்கள அரசின் சினத்தினத்திற்குள்ளாகி விடுவோமே என்ற பயப்பீதியோ? சிங்களன் சினக்கொண்டு சீறீனாலென்ன? செந்தமிழன் செத்தாலென்ன? அல்லது எவனாவது எக்கேடுகெட்டு சீரழிந்து போகட்டுமே என்ற ஏமாப்புப்பு தனோன்ற கேள்வி தான் எமைப் போன்றோரின் சித்தப்பிரமையும், சிரசேறிய சிந்தனையும். கொத்துக் குண்டுகளாலும் எறிகணை வீச்சாலும் செத்துக்கொண்டும் விழுப்புண்ணடைந்தும் சாயும் பிஞ்சுகளையும் மக்களையும் பார்க்காத சமத்தர்கள் தான் இந்த சர்வதேச சமூகத்தவர்கள். வனேறிவந்து வகைவகையாய் கொண்டுகளைக் கொட்டி, வாழ்வைத் துடைத்தழிக்கும் வல்லூறுகளை, நஞ்சுக் குண்டினை வீசி மூச்சுவிடக் கூட விடாமல் நாசிகளைக் நசுக்கும் நயவஞ்சகர்களை நாகரித்திர்க்குத் தன்னும் நவேடுத்துக் கேன்காதவர்கள் தான் இந்த உலக நாயகர்கள். உலகே தடைசெய்த இரசாயனக் கொண்டுகளையும், பூமத்தம் பூவுக்குக் கிட்டவே போகாத பிள்ளைகளுக்கு மேல கொடிய நன்சுக்குண்டுகளைப் போடும்போது கூட எமைப் பார்த்து பரிதாபபடாதவர்கள் தான் இந்தப் பாராளும் பண்பாளர்கள்.

எங்கள் சாவுகளுக்கு சலிப்படையாதவர்கள் இப்படிப்பட்ட இந்த காட்சிகளையும் வதந்திகளையும் ஏன் இவர்கள் வெளியிடவேணும். எனளின் தலைவர்கள் உயிரோடு இருக்கும் போதும், அவர்களைச் சாகடித்து, அவர்கள் சாவுகளை இவர்கள் ஏன் சரித்திரத்தினைப் போல சித்தரிக்க வேண்டும்? அதில் தான் அவர்கள் உச்சப் பயடைகிறார்கள். இன்று சிறிலங்கா அரசும் இந்திய அரசும் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் சர்வதேச அழுத்தம். புலம்பெயர் தமிழர்களால் இடைவிடாதகவனயீர்ப்புப் போராட்டங்களால் அந்தந்த நாட்டின் அரசுகள் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ அவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளனர். முன்னரைப் போல எம்மவர்கள் இப்போது தொழிலாளர் சமூகம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு இந்தப் புலம் பெயர்ந்த சமூகம் வேலைக்காக மட்டுமே இந்த தேசத்தில் வாழ்ந்துவந்தனர்.

ஆனால் இப்போது அவர்கள் இந்த நாட்டிலே குடியுரிமையைப் பெற்று வாழ்ந்து வருவதால் அவர்களின் பிள்ளைகள் அந்நாட்டின் வாரீசுகள் ஆகிவிட்டன. அத்தோடு இந்த இளைய சமூகம் அந்தந்த நாட்டின் மொழிகளிலும் கலாச்சாரத்திலும் வளர்ந்து வருவதால் அவர்கள் அங்கேயுள்ளவர்களுடன் சரளமாக உரையாடவும் விவாதிக்கவும் தகுந்த தகுதியுள்ளவர்கலாயிருக்கின்றனர். ஆதலாலும் தங்கள் நாட்டின் பிரைஞைகளை எதிர்க்க முடியாதுள்ளது. ஆகவே அவர்களின் கோரிக்கையை மதிக்கவேண்டிய நிலை அந்த நாட்டின் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆக இந்த தொடர் போராட்டங்களைக் குழப்புவதற்கும், அதன் வீரியத்தினைக் குறைத்துக் கொள்ளவும் இந்தக் குள்ள நரிக்கூட்டம் முனைப்புடன் செயற்படுகிறது. இந்தப் போராட்டத்தினைத தொடர்வதலே அவ்வப்போது சில நாடுகள் தங்கள் திருவாயைத் திறந்து அருள்வாக்குப் போன்று அறிக்கைகளை வெளியிடுகின்றன. ஆதலால் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை கட்டாயமாக நிறுத்திவைக்கவேண்டிய நிலைக்கு சிறிலங்கா இயந்திரம் இயக்கப்பட்டு விட்டது.

இந்தப் புலம்பெயர் தமிழர்களை புலிகளிடமிருந்து பிரிக்க முயன்று தோற்றுப் போனது இந்த சிங்கள பேரினவாத இயந்திரம். எனினும் புலம்பெயர் மக்கள் புலிகளை வெறுக்கச் செய்யும் நடவேடிக்கையினை முடுக்கி விட்டுள்ளது. அதன் வெளிப்பாடுகளே தமிழர் தலைவரின் மறைவான மடத்தனமான பிரச்சாரம். இதனால் தமிழர்கள் "தலைவரே இல்லை இனியென்ன...." என்று சலிப்படைவார்கள் என்றேன்னியே கட்டவிழ்த்துவிட்டனர் ஒரு கடும் பொய்யை. அத்தோடு கூடி நீளும் போரை நிறுத்துமாறு பலமான வல்லரசுகள் சில கோரிக்கை வைத்தனர். அவர்களின் போர்நிறுத்தமென்ற வேண்டுகோளை தவிர்ப்பதற்காக தங்களின் தார்மீக கடமையை செய்கின்றனர் சிங்களர். எனினும் இவையனைத்தையும் உணர்ந்து தமிழர் தொடர்ந்து தங்கள் தாயக விடிவுக்கான இலட்சியப் பாதையில் பயணிக்கவேண்டும் என்பதுதான் எம்மெல்லோரின் தாகம். “எழுச்சி கொண்ட எந்த மக்களும் வீழ்ச்சிகொண்டதாக சரித்திரமில்லை” என்ற அண்ணனின் அமுத வாக்கினை அடியொற்றி அவரின் வழிகாட்டலில் தொடர்ந்து தர்மநிலைனின்று போராடி, மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் சிங்களத்தின் எச்சில் எலும்புக்காக, அவர்களின் அராக்கியத்துக்குத் துணைபோய் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த அனைத்து ஊடகங்களுக்கும் நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

தாயகத்திலிருந்து,
கவே.கரிகாலன்.

Comments