பொய் பேசுவதில் கோயபல்சையும் மிஞ்சிவிட்டார் சோ‌னியா : வைகோ

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு இந்திய அரசின் முயற்சியே காரணம் என்று கூறியுள்ள சோ‌னியா கா‌ந்‌தி, பொய் பேசுவதில் கோயபல்சையும் மிஞ்சிவிட்டார் எ‌ன்று ம.தி.மு.க. பொது செயலர் வைகோ கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு இந்தியா ஆயுதம் கொடுக்கவில்லை என்றும், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி உள்ளோம் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் சென்னை கூட்டத்தில் கூறினார். இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்.

நேற்று சென்னையில் பேசிய சோனியா காந்தியும் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு இந்திய அரசின் முயற்சியே காரணம் என்று கூறியுள்ளார். பொய் பேசுவதில் கோயபல்சையும் மிஞ்சிவிட்டார் சோனியா காந்தி.

கடந்த 2 நாட்களில் மட்டும் 3 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு 5 ஆயிரம் மரணக் காயத்துக்கு உள்ளாக்கப்பட்டு, மூ‌ன்றரை இலட்சம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி பரிதவித்து கொண்டுள்ள நிலையில் தமிழர்களை ஏமாளிகள் என்று நினைத்து பேசியுள்ளனர்.

இ‌ன்னு‌ம் நா‌ன்கை‌ந்து நா‌ட்க‌ளி‌ல் தமது அ‌திகார‌ம் முடிவு‌க்கு வர‌ப்போவதை உண‌ர்‌ந்து கொ‌ண்ட சோ‌னியா கா‌ந்‌தி அடு‌த்த ஐ‌ந்து ‌தின‌ங்க‌ளி‌ல் ஈழ‌த் த‌‌மி‌ழ் இன‌த்தையே பூ‌ண்டோடு ஒ‌ழி‌த்‌திட ராஜ‌ப‌க்சேவுட‌ன் சே‌ர்‌ந்து வகு‌த்த ச‌தி‌த்‌தி‌ட்ட‌ம்தா‌ன் இ‌த்தா‌க்குத‌ல்களாகு‌ம்.

தமிழன் மானம் இழந்துவிடவில்லை, சொரணை செ‌‌‌த்து‌விட‌வி‌ல்லை என்பதை நிரூபிக்கின்ற வகையில் சென்னைக்கு வந்த சோனியா காந்திக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான குழுவினர் கறுப்பு‌க்கொடி ஏந்தி கண்டனம் தெரிவித்தனர்.

அவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் பூட்டியுள்ள அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

வரலா‌ற்‌றி‌ல் ம‌ன்‌னி‌க்க முடியாத துரோக‌த்து‌க்கு உட‌ந்தையாக இரு‌ந்தவ‌ர் கருணா‌நி‌தி எ‌ன்ற அவ‌ப்பெயரை சும‌ந்து‌ ‌நி‌ற்‌கிறா‌ர்.

ஈழ‌த் த‌‌மிழ‌ர் இன‌த்தையு‌ம் அ‌வ‌ர்களை‌க் கா‌த்து ‌நி‌ற்கு‌ம் ‌விடுதலை‌ப்பு‌லிகளையு‌ம் மு‌ற்றாக‌க் கொ‌ன்று ஒ‌ழி‌க்க ராஜப‌க்சே- சோ‌னியா கா‌ந்‌தி- கருணா‌நி‌தி போ‌ட்ட இரக‌சிய ச‌‌தி‌த்தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌விளைவுதா‌ன் தொடரு‌ம் மரண பய‌ங்கர‌த் தா‌க்குத‌ல்களாகு‌ம்.

உலக‌த் த‌மிழ‌ர்களே! தாயக‌த் த‌மிழ‌ர்களே! இவ‌ர்களுடைய துரோக‌த்தை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்‌வீ‌ர்'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

Comments